For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் ரூ170 கோடி பணம், 130 கி.தங்கம் சிக்கியது

சென்னையில் போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டி வீட்டில் ஐடி அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். இச்சோதனையில் ரூ170 கோடி, 130 கிலோ தங்கம் சிக்கியது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: போயஸ் கார்டனுக்கு மிக நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் ரூ170 கோடி ரொக்கம், 130 கிலோ தங்கம் பிடிபட்டது. இதில் ரூ70 கோடி ரூ2,000 நோட்டுகளும் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று காலை முதல் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். போயஸ் கார்டனுக்கு நெருக்கமான கான்டிராக்டர் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனுவாச ரெட்டி ஆகியோரது வீடு, அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

இச்சோதனையில் ரூ170 கோடி ரொக்கம் மற்றும் 130 கிலோ தங்கம் சிக்கியது. இதில் ரூ70 கோடிக்கு புதிய ரூ2,000 நோட்டுகளும் பிடிபட்டன.

வேலூர் பூர்வீகம்

வேலூர் பூர்வீகம்

இந்த சேகர் ரெட்டியின் பூர்வீகம் வேலூர் காட்பாடி அருகே உள்ள தொண்டான்துளசி கிராமம். தொடக்கத்தில் சென்னையில் ரயில்வே கான்டிராக்ட் பணிகளை செய்து வந்தார் சேகர் ரெட்டி.

அதிமுக உறுப்பினர்..

அதிமுக உறுப்பினர்..

பின்னர் தொகுதி எம்.எல்.ஏ.க்கள் மேம்பாட்டு நிதியின் கீழான கான்டிராக்ட்டுகளைப் பெறத் தொடங்கினார் சேகர் ரெட்டி. அத்துடன் 1998-ம் ஆண்டு அதிமுகவின் உறுப்பினரானார்.

லஞ்சமாக திருப்பதி பிரசாதம்

லஞ்சமாக திருப்பதி பிரசாதம்

திருப்பதி கோவில் உயர் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்தவர் ரெட்டி. இதனால் திருப்பதி கோவில் பிரசாதத்துடன் சென்னையில் விவிஐபிக்களை சேகர் ரெட்டி சந்தித்து நட்பாக்கிக் கொண்டார்.

போயஸ் கார்டன்

போயஸ் கார்டன்

டாக்டர் விஜயபாஸ்கர் மூலமாக சசிகலா குடும்பத்தின் டாக்டர் வெங்கடேஷூடன் அறிமுகமானார் சேகர் ரெட்டி. இதைத் தொடர்ந்து போயஸ் கார்டனுக்கும் நெருக்கமானார் ரெட்டி. கடந்த ஆண்டு அதிமுகவின் புதிய கஜானா என்று ஜூனியர் விகடன் வார இதழ் சேகர் ரெட்டியை குறிப்பிட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.

English summary
IT officials raid in Chennai Sekar reddy and Seenivasa reddy house. 100 kg gold and Rs.90 crore seized
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X