For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விசாரணையில் ஷாக்.. டிடிவி தினகரனுக்கு பணத்தை வாரி இறைத்த மணல் மாஃபியா.. ஐஏஎஸ் அதிகாரிகள் உடந்தை

டிடிவி தினகரனுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்து உதவிய விவகாரத்தில் தமிழகத்தின் மிக முக்கிய மணல் குவாரி அதிபர்களும்,ஐஏஎஸ் அதிகாரிகளும் வருமானத்துறை சோதனையில் சிக்கவுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிடிவி தினகரனுக்கு ரூ.50 கோடியைப் புரட்டிக் கொடுத்தது மணல் அதிபர்கள் சிலர் என்று தெரியவந்துள்ளது.

இவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்தது சில ஐஏஎஸ் அதிகாரிகள் என்றும் தெரிகிறது.இதனால் அவர்கள் அனைவரும் ஐடி ரெய்டு பீதியில் தவிக்கிறார்கள்.

தேர்தல் ஆணையத்தில் உள்ள அதிகாரிகளை பணக்கட்டுகள் மூலம் விலைக்கு வாங்கி, இரட்டை இலையை வாங்கிடலாம் என்று கணக்குப் போட்டார் டிடிவி தினகரன்.

 ஷாக் தகவல்கள்

ஷாக் தகவல்கள்

டெல்லி போலீஸ் வேறு கணக்குப் போட்டு அவரைக் கைதுசெய்து திகாரில் அடைத்துள்ளது.போலீஸ் விசாரணையில் தினகரன்,தனக்குப் பணம் யார் யாரெல்லாம் கொடுத்தார்கள் என்று புட்டுப் புட்டு வைத்துள்ளார்.அவரின் பதிலில் டெல்லி போலீசாரே அதிர்ந்து போயுள்ளனர்.

 தினகரன் அபார டெக்னிக்

தினகரன் அபார டெக்னிக்

கோடிக்கணக்கில் பணத்தைத் திரட்டுவதில் அதை 'டெலிவரி' செய்வதிலும் உள்ள 'தினகரன் டெக்னிக்' அவர்களைக் கொஞ்சம் மிரட்சியடைய செய்துள்ளது.பணத்தை திரட்டுவதில் தினகரனுக்கு உதவிக்கரம் நீட்டியவர் ஈரோடு மணல் குவாரி அதிபர் ஒருவர் என்கிறது போலீஸ் வட்டாரம்.

 ஐஏஎஸ் அதிகாரி உடந்தை

ஐஏஎஸ் அதிகாரி உடந்தை

இந்த குவாரி அதிபருக்குத்தான் சமீபத்தில் புதிய மணல் கான்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது.அதற்கு,தினகரனுக்கு நெருங்கிய பொதுப்பணித்துறை ஐஏஎஸ் அதிகாரிதான் உதவியாக இருந்துள்ளார்.

 ரெய்டுக்கு ரெடி

ரெய்டுக்கு ரெடி

இதே போல இன்னும் சில மணல் அதிபர்களும்,ஐஏஎஸ் அதிகாரிகளும் உதவியுள்ளதை,விசாரணையில் கொட்டியுள்ளார் தினகரன்.விஷயம் கேள்விப்பட்ட மணல் அதிபர்களும்,தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளும் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.அவர்கள் மீது விரைவில் ஐடி ரெய்டு பாயும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

English summary
Income Tax Raid expected at Tamilnadu sand quarries and IAS officers house as TTV Dinakaran revealed truth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X