For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை அதிரடி ரெய்டு… செய்தியாளர்களை விரட்டி போலீசார் அடாவடி

Google Oneindia Tamil News

சென்னை: சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை திடீர் சோதனையில் இறங்கியுள்ளது. இன்று அதிகாலை தொடங்கிய சோதனை விறுவிறுப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை எழும்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் மயிலாப்பூரில் உள்ள அவரது உறவினர்கள் வீடு என சுமார் 30 இடங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனையில் அதிரடியாக இறங்கியுள்ளனர்.

சென்னையில் மட்டும், நுங்கம்பாக்கம், தியாகராயர் நகர் உள்ளிட்ட 20 இடங்களில் வரிமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிரடி சோதனை

அதிரடி சோதனை

இதுதவிர புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர், ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு பணப்பட்டுவாடா புகார் டிடிவி தினகரன் கட்சியினர் மீது கடுமையாக எழுந்துள்ளது.

பத்திரிகையாளர்கள்

பத்திரிகையாளர்கள்

அமைச்சர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை என்று தெரிந்த உடன் செய்தியாளர்களும் புகைப்படக் கலைஞர்களும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டின் முன் குவிந்தனர். அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டும் தொலைக்காட்சிகளுக்கு நேரலையில் பேசிக் கொண்டும் இருந்தனர்.

போலீஸ் அடாவடி

போலீஸ் அடாவடி

அப்போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், பத்திரிகையாளர்களையும் புகைப்படக் கலைஞர்களையும் நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என்று கூறி பிடித்து தள்ளிவிட்டார். இதனால் கோபம் அடைந்த செய்தியாளர்கள் போலீசாரை எதிர்த்து கேள்வி கேட்டனர்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது என்று தகவல் வந்தால் செய்தியாளர்களாக செய்தி சேகரிப்பது எங்களது பணி என்றும் பத்திரிகையாளர்கள் அதனைத் தடுக்க போலீசாருக்கு உரிமை இல்லை என்றும் வாதிட்டனர். இதனையடுத்து, சற்று ஜகா வாங்கிய போலீசார் அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.

English summary
Police tights media person, who are gathering news about minister’s residence IT raid.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X