For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரகு மரணத்திற்கு அலங்கார வளைவுதான் காரணம்.. கோவையில் உள்ள பேனர்களை அகற்ற ஹைகோர்ட் அதிரடி உத்தரவு!

கோவையில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்கள் மற்றும் கட்அவுட்களை உடனடியாக அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ரகுவை கொன்றது யார்?..சாலையில் எழுதப்பட்ட வாசகம் இரவோடு இரவாக அழிப்பு!- வீடியோ

    கோவை: கோவையில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்கள் மற்றும் கட்அவுட்களை உடனடியாக அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அதிமுக சார்பில் வைக்கப்பட்ட அலங்கார வளைவால் ஏற்பட்ட விபத்தில் ரகு என்ற சாஃப்ட்வேர் என்ஜினியர் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்தனர்.

    ஆனால் ரகு மரணத்துக்கு லாரிதான் காரணம் என்று கூறிய கோவை காவல்துறை லாரி ஓட்டுநரை கைது செய்தது. மேலும் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் உள்ளது என்றும் கூறியது.

    இன்று விசாரணைக்கு வந்தது

    இன்று விசாரணைக்கு வந்தது

    இந்நிலையில் இதுதொடர்பாக திமுக எம்எல்ஏ கார்த்திக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    அலங்கார வளைவுதான் காரணம்

    அலங்கார வளைவுதான் காரணம்

    அப்போது ரகு உயிரிழப்புக்கு அலங்கார வளைவு தான் காரணம் என தெளிவாக தெரிகிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் அலங்கார வளைவுதான் காரணம் என்றாலும் மரண விசாரணைக்குள் செல்ல விரும்பவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    பேனர்களை அகற்ற உத்தரவு

    பேனர்களை அகற்ற உத்தரவு

    கோவையில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கட்அவுட்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் விதிகளை மதிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அதிகாரிகள் அனுமதிப்பது எப்படி?

    அதிகாரிகள் அனுமதிப்பது எப்படி?

    சாலையை மறைத்து பேனர்கள் வைக்க அதிகாரிகள் அனுமதிப்பது எப்படி என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் திமுக எம்எல்ஏ கார்த்தி சார்பில் தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

    English summary
    Chennai high court orders to remove all the banners n Coimbatore. Judges said its clear that the decorative curves only the reason for Ragu's death.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X