For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியலுக்கு வந்தால் நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறுவார்... சொல்கிறார் நக்மா!

அரசியலுக்கு வந்தால் நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறுவார் என மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: அரசியலுக்கு வந்தால் நடிகர் ரஜினிகாந்த் வெற்றி பெறுவார் என மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் நக்மா தெரிவித்துள்ளார். ரஜிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா இன்று காலை சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது நடிகர் ரஜினிகாந்தை நட்பு ரீதியாக மட்டுமே சந்தித்ததாக அவர் கூறினார். ரஜினியுடனான சந்திப்பில் அரசியல் நோக்கம் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.

அரசியலுக்கு வரவேண்டும்

அரசியலுக்கு வரவேண்டும்

ரஜினிகாந்த் ஏதாவது கட்சியில் சேருவதோ அல்லது புதுக் கட்சி தொடங்குவதோ அவரது விருப்பம் என்றும் நக்மா கூறினார். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பது தமது விருப்பம் என்றும் நக்மா தெரிவித்தார்.

நிறைய எதிர்ப்பார்ப்பு..

நிறைய எதிர்ப்பார்ப்பு..

ரஜினி அரசியலுக்கு வந்தால் வெற்றி பெற வேண்டும் என்றும் நக்மா கூறினார். ரஜினியிடம் மக்கள் நிறைய எதிர்பார்ப்பு வைத்துள்ளனர் என்றும் நக்மா தெரிவித்தார்.

வளையல் போராட்டம்

வளையல் போராட்டம்

ரஜினி அரசியலுக்கு வந்தால் நிச்சயம் வெற்றி பெறுவார் என நக்மா நம்பிக்கை தெரிவித்தார்.மோடிக்கு வளையல் அனுப்பும் போராட்டம் என்பது பதிலடிதான் என்றும் அவர் கூறினார்.

அதிக வீரர்கள் உயிரிழப்பு

அதிக வீரர்கள் உயிரிழப்பு

காங்கிரஸ் ஆட்சி காலத்தைவிட தற்போது எல்லையில் அதிக வீரர்கள் உயிரிழக்கின்றனர் என்றும் நக்மா தெரிவித்தார். தற்போதைய அரசியல் சூர்நிலையில் ரஜினிகாந்துடன் காங்கிரஸ் கட்சியின் நக்மாவின் சந்திப்பு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

English summary
Mahila congress general secretary nagma meets Rajini kanth in poes garden. After the meeting she was talking with press. She said its a friendly meet with Rajinikanth. There is no political intention in this meet she said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X