For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை ஏர்போர்ட் 109டிகிரி வெப்பம் - மிகவும் வெப்பமான நாள் இன்று - தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை விமானநிலையத்தில் 109 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டின் மிகவும் வெப்பமான நாள் இது என்று தமிழ்நாடு வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையின் மிகவும் வெப்பமான நாள் இன்று என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை விமானநிலையத்தில் 109 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் என்று இளம் தலைமுறையினரால் அறியப்படும் பிரதீப் ஜான், வானிலை ஆராய்ச்சியில் ஆர்வமுள்ளவர், மழை, வெப்பம் பற்றி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் என்று இரு தினங்களுக்கு முன்பே பதிவிட்டு எச்சரித்த வெதர்மேன், வெப்பநிலை பற்றி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

வெப்பமான நாள்

சென்னையில் வெயிலின் தாக்கத்தை குறித்து இன்று ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ள வெதர்மேன், "இந்த ஆண்டின் மிகவும் வெப்பமான நாள் இன்றுதான்" என்று தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் பின்வரும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

109 டிகிரி பாரன்ஹீட்

109 டிகிரி பாரன்ஹீட்

இன்று சென்னை விமான நிலையத்தில் வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸை தொட்டுள்ளது. இது 109 டிகிரி பாரன்ஹீட் அளவாகும். கடந்த ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதிக்கு பிறகு, இன்றுதான் இவ்வளவு வெப்பம் பதிவாகி உள்ளது. வரும் நாள்களில் இதைவிட கடுமையான வெப்பம் பதிவாகும்.

காப்பாற்றும் கடல் காற்று

காப்பாற்றும் கடல் காற்று

கடற்காற்று சென்னையில் கடலோர பகுதி மக்களையும், நகரவாசிகளையும் காப்பாற்றினாலும் சென்னை விமானநிலையம், புறநகர் பகுதிமக்களை சுட்டெரிக்கிறது என்று கூறியுள்ளார்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

சென்னையில், இந்த ஆண்டின் மிகவும் வெப்பமான நாள் இன்று. எனவே சென்னை மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும். முக்கியமாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது என்று அவர் எச்சரித்துள்ளார்.

English summary
TamilNadu weatherman post his facebook page, Sea Breeze saves City by bringing down the temperature but interior parts of City and outskirts sizzles with Chennai Aiprort reaching 43 C.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X