For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்எல்ஏவா இருப்பது அவ்வளவு ஈசி இல்ல.. எவ்வளவு செலவாகுது தெரியுமா? புலம்பும் திமுக எம்எல்ஏ!

எம்எல்ஏவாக இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல என திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: எம்எல்ஏவாக இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல என திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு எம்எல்ஏக்களுக்கு கடந்த ஆண்டு ஊதியத்தை இருமடங்காக உயர்த்தி அறிவித்தது. தமிழக அரசு கடுமையான நிதிச்சுமையில் இருக்கும் போது இந்த சம்பள உயர்வு தேவைதானா என விமர்சனங்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் போது இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

ஊதிய உயர்வுக்கு எதிர்ப்பு

ஊதிய உயர்வுக்கு எதிர்ப்பு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனை தீரும் வரை சம்பள உயர்வை திமுக எம்எல்ஏக்கள் பெற மாட்டார்கள் என்றார்.

செலவை பட்டியலிடலாம்

செலவை பட்டியலிடலாம்

இந்நிலையில் சட்டசபையில் இன்று பேசிய திமுக உறுப்பினர் கே.என் நேரு எம்எல்ஏக்களின் சம்பளம் ஒரு லட்சமா என பத்திரிக்கையாளர்கள் கேட்கிறார்கள். கிரிக்கெட், சடுகுடு, கல்யாணம் என எங்களது செலவை பட்டியலிடலாம்.

பில் கொடுக்கிறோம்

பில் கொடுக்கிறோம்

எனவே எங்களுக்கு சம்பளம் வேண்டாம் எங்களது பில்களை சமர்ப்பிக்கிறோம் அதைகொடுத்தால் போதும் என்றார். எம்எல்ஏவாக இருப்பது அவ்வளவு எளிதல்ல.

எம்எல்ஏவாக இருப்பது எளிதல்ல

எம்எல்ஏவாக இருப்பது எளிதல்ல

எம்எல்ஏவாக இருப்பது எவ்வளவு சிரமம் என்று இருந்து பார்த்தால்தான் தெரியும். எம்எல்ஏக்களுக்கான ஊதிய உயர்வை பொதுமக்களும் பத்திரிக்கைகளும் தொடர்ந்து விமர்சிக்கின்றனர்.

எவ்வளவு செலவாகுது தெரியுமா?

எவ்வளவு செலவாகுது தெரியுமா?

எல்எல்ஏக்களாக இருப்பது எளிதானதல்ல. தொகுதி பிரச்சனைகள், திருமண நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களுக்கு ஆகும் செலவினை அரசு ஏற்றால் போதும், ஊதியமே தேவையில்லை. இவ்வாறு எம்எல்ஏவும் திமுக முன்னாள் அமைச்சருமான கே என் நேரு தெரிவித்தார்.

English summary
DMK MLA KN Nehru Says its not easy to be a MLA. So much expenses are there for MLAs he said further.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X