For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை மதரஸே- இ- ஆஸம் பள்ளிக்கூடம் இடிப்பா? முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. அபூபக்கர் விளக்கம்

சென்னை மதரஸே- இ- ஆஸம் பள்ளிக்கூட விவகாரம் தொடர்பாக எம்.எல்.ஏ அபூபக்கர் விளக்கம் அளித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மதரஸே- இ- ஆஸம் பள்ளிக்கூட விவகாரம் தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ. விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அபூபக்கர் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை:

IUML MLA Abubacker on Madras-e-Azam Higher Secondary School issue

ஆற்காடு நவாப் ஆட்சிக் காலத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி உயர்விற்காக வேண்டி மதரஸே - இ - ஆஸம் பள்ளிக்கூடம் துவங்கப்பட்டு பல்லாண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுதந்திரத்திற்கு பின்பு அந்த பள்ளிக்கூடம் தமிழ்நாடு அரசாங்கத்தால் நடத்தப்பட்டு வருகிறது. மிகவும் பழுதடைந்த கட்டிடங்களாக இருப்பதின் காரணமாக அதை புரனமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரால் வைக்கப்பட்டு வந்தது.

சென்ற மாதம் அக் கட்டிடத்தை இடித்து விட்டு அங்கே வணிக வளாகம் கட்டப் போவதாக செய்தி எனக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே இந்த செய்தியை இ.யூ.முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீனை 29.11.2017 அன்று தொடர்பு கொண்டு தெரிவித்து மேல் நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்தேன். காதர் மொகிதீனும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினருடனும், அரசாங்க தரப்பிலும் விளக்கத்தை கேட்க என்னை பணித்தார்கள்.

அதனடிப்படையில் நவம்பர் 30ஆம் தேதி ஆற்காடு இளவரசர் முஹம்மது அப்துல் அலியைத் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக விளக்கம் கேட்டேன். அப்போது அவர் ''தான் இது சம்பந்தமாக தமிழக முதல்வர், கல்வி அமைச்சர், வக்ஃப் வாரிய அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து அக் கட்டிடத்தையொட்டிய வளாகம் முழுவதும் சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக்காக எங்களால் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த நோக்கத்தின் அடிப்படையின் இவ்விடத்தை கல்வி பணிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக வணிக வளாகம் உள்ளிட்ட எந்த புதிய ஏற்பாடும் செய்யக் கூடாது. பள்ளிக்கூட கட்டிடம் கட்டுவதில் சிரமங்கள் இருந்தால் அதனை ஆற்காடு எண்டோர்மெண்ட் வசம் ஒப்படைத்து விடுங்கள் என்று சொல்லி இருக்கிறோம்'' என்றார்.

தமிழக அரசு கல்விக்காக வேண்டி மட்டுமே பயன்படுத்துவோம் என தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். எனவே இது சம்பந்தமாக அரசியல் கட்சிகள் தலையிட வேண்டாம் எனவும், இதனை அரசியலாக்க வேண்டாம் எனவும் என்னிடம் தெரிவித்தார். தொடர்ந்து மறுதினம் உறுதி படுத்தக்கூடிய வகையில் தமிழக கல்வி அமைச்சர், வக்ஃப் வாரிய அமைச்சர் ஆகியோரிடம் நான் பேசிய போது அவர்களும் மதரஸே - இ - ஆஸம் இடத்தை வேறு எந்த வகையிலும் பயன்படுத்த மாட்டோம் என்று சொன்னார்கள். இந்த அடிப்படையில் இந்த விஷயம் சுமுகமாக அமையும் என்பதை தலைவர் காதர் மொகிதீனிடம் 2.12.2017 அன்று எடுத்துக் கூறினேன்.

IUML MLA Abubacker on Madras-e-Azam Higher Secondary School issue

சென்ற வாரம் தலைமை செயலகத்திற்கு நான் சென்ற போது கல்வி அமைச்சரின் தனிச் செயலாளரும் மீண்டும் அதையே உறுதி படுத்தினார். 7.12.2017 அன்று தொழிலாளர் நலன் மற்றும் வக்ஃப் வாரிய அமைச்சர் நிலோபர் கபீலின் அலுவலகத்தில் மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டு இருக்கும் முத்தலாக் குறித்த சட்ட முன்வடிவு தமிழக அரசின் நிலையை அறிவிப்பதற்கு முன்பாக ஒரு கூட்டத்தை அமைச்சர் கூட்டியிருந்தார். அந்த கூட்டத்திற்கு அன்வர் ராஜா MP, தமிழ் மகன் உசேன், ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்களும் கலந்து கொண்டனர். நானும் கலந்து கொண்டு இக் கூட்டத்தில் சமுதாயத்தின் கோரிக்கையையேற்று முத்தலாக் பிரச்சனையில் மத்திய அரசின் சட்ட வடிவை ஆதரிக்க மாட்டோம் என தமிழக அரசு அறிவித்தது.

அன்றும் நான் அமைச்சர் நிலோபர் கபீலிடம், மதரஸே - இ - ஆஸம் பள்ளிக்கூட சம்பந்தமாக பேசிய போது அரசு நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். கல்விக்காகத் தான் அதனை பயன்படுத்த உள்ளோம் என உறுதிபடக் கூறினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்தவரை அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து அமைப்புகளின் கூட்டமைப்பில், ஒருங்கிணைப்பாளர் அப்பல்லோ அனிபா இருந்த போது நாம் அதில் இடம் பெறுவது இல்லை எனவும் பிரச்சனைக்காகவே தனிகூட்டமைப்பு வேண்டாம் என்பது நிலைபாடு என்பதை காதர்மொகிதீன், தெளிவாக மாநில செயற்குழுவிலேயே தெரிவித்து விட்டார். மேலும் இக் கூட்டமைப்பில் அப்பல்லோ அனீபா, பாத்திமா முஸப்பரையும் இ.யூ.முஸ்லிம் லீக் என குறிப்பிட்டு வருவதை நாம் கடுமையாக ஆட்சேபம் செய்து வந்துள்ளோம்.

அந்த அடிப்படையில் கூட்டமைப்பில் அன்றும் இல்லை இன்றும் இடம் பெறவில்லை. நமது நிலைப்பாட்டையே மாநில ஜமாஅத்துல் உலமா இன்றைய புதிய நிர்வாகிகளும் தெளிவாக அறிவித்து உள்ளார்கள்.

இதனிடையே இ.யூ.முஸ்லிம் லீக் மாநில செயலாளர் மில்லத் இஸ்மாயில் என்னை தொடர்பு கொண்டு மதரஸே இ ஆஸம் பள்ளிக்கூட சம்பந்தமாக பதட்டமாக இருப்பதாக கூறினார். நான் உடனே 29.11.2017 அன்று முதல் இது சம்பந்தமாக பேசி எடுத்துவரும் நடவடிக்கைகளை விரிவாக சொன்னேன். இதை அரசியலாக்க வேண்டாம் என ஆற்காடு நவாப் கூறியதையும் சொன்னேன்.

இந்நிலையில் அங்கே பதட்டம் ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ அனீபா பேட்டியை தொலைக்காட்சியில் கண்டேன். அதை கண்டவுடன் மீண்டும் அமைச்சர்களை தொடர்பு கொண்டு கேட்டேன்.

ஏற்கனவே இது சம்பந்தமாக தாங்களிடம் சொல்லி இருக்கிறோமே அதில் அரசு தெளிவாக உள்ளது என கூறினார்கள். இதற்கிடையில் கூட்டமைப்பினர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதாக தகவல் வந்தது. வக்ஃப் வாரிய அமைச்சர் நிலோபர் கபீல் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரது அரசு தனி செயலர் ஆகியோர் என்னை நேற்று அலைபேசியில் தொடர்பு கொண்டு மீண்டும் உறுதி பட தெரிவித்தனர்.

IUML MLA Abubacker on Madras-e-Azam Higher Secondary School issue

ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் ஹஸ்ரத் அன்வர் பாஷாவும் அமைச்சர் நிலோபர் கபீலை தொடர்பு கொண்டு கேட்டபோதும் அதையே அமைச்சர் உறுதியளித்தாகவும் என்னிடம் தெரிவித்தார். இ.யூ.முஸ்லிம் லீகை பொறுத்தவரை தேவையில்லாமல் எந்த ஒரு காரியத்தையும் அரசியல் ஆக்கி ஆதாயம் தேடக்கூடிய கட்சி அல்ல. முஸ்லிம் லீகை பொறுத்தவரை பிரச்சனைகளை சுமூகமான முறையிலும், ஆக்கபூர்வமாவும் செயலாற்றி வரும் பேரியக்கம் ஆகும். மதரஸே - இ - ஆஸம் கட்டிட்ட இடிப்பு சம்மந்தமாக பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு விளக்கங்கள் கேட்டதன் பேரில் இங்கே தெளிவுபடுத்தி இருக்கிறேன்.

இவ்வாறு அபூபக்கர் எம்.எல்.ஏ. விளக்கம் அளித்துள்ளார்.

English summary
IUML State General Secretary and Kadaiyanallur MLA Muhammad Abubacker today explained on that the Madras-e-Azam Higher Secondary School issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X