For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர் மனம் குளிர 'ஹஜ் மானியம் ரத்து' அறிவிப்பு: காதர்மொய்தீன்

மத்திய அரசின் ஹஜ் மானியம் ரத்து குறித்து முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர்மொய்தீன் கருத்து தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    இஸ்லாமியர்களுக்கான ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து

    சென்னை: இந்தியா வருகை தந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் மனம் குளிரும் வகையில் 'ஹஜ் மானியம் ரத்து' அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் சாடியுள்ளார்.

    இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:

    IUML President Khader Mohideen comments on Haj Subsidy Withdrawn

    இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வருகை தந்த இந்த தினத்தில் அவர் மனம் குளிரும் வகையில் ஹஜ் மானியம் ரத்து என்ற அறிப்பை பிரதமர் மோடி அரசு செய்து இருக்கிறது.

    நீண்ட காலமாக இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் மீது சுமத்தப்பட்டு வந்த அபாண்டமான பொய் பிராச்சாரத்துக்கு முடிவுக்கு வந்துள்ளது. கப்பல் போக்குவரத்துக்கும் விமான போக்குவரத்துக்கும் இடையில் ஏற்பட்ட கட்டண வித்தியாசத்தை சரி கட்டும் வகையில் இந்திராகாந்தி அரசு அளித்த ஏற்பாட்டை தான் மானியம் என்று கூறிவந்தார்கள்.

    காங்கிரஸ் அரசு அளித்த வசதியை மத்திய ஆளும் பா.ஜ.க.வின் அரசு நிறுத்தி விட்டது என்று நாளைய வரலாறு குறிக்கும். ஹஜ் பயணத்தை கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.வின் பேச்சுக்கு இனி இடமில்லாமல் போனது பற்றி முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சி அடையும்.

    இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர்மொய்தீன் கூறியுள்ளார்.

    English summary
    Indian Union Muslim League president Khader Mohideen's comment on Haj Subsidy Withdrawn by the Centre.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X