For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக, அதிமுக கூட்டணியின் 4 முஸ்லீம் கட்சிகள் தலா ஒரு இடத்தில் நேருக்கு நேர் மோதல்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம்லீக் கட்சியும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள் தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியும் கடையநல்லூர் தொகுதியில் நேருக்கு நேர் மோதவுள்ளன.

அதேபோல திமுக கூட்டணியின் மனித நேய மக்கள் கட்சியும், அதிமுகவின் மனிதநேய ஜனநாயக கட்சியும் தலா ஒரு தொகுதியில் நேருக்கு நேர் மோதுகின்றன.

IUML and TMML to lock horns in Kadayanallur

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது காதர் மொகிதீன் தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி. இக்கட்சிக்கு திமுக 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அந்தத் தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டன.

அதன்படி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி முக்கியமான வாணியம்பாடி, கடையநல்லூர், விழுப்புரம், பூம்புகார், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மறுபக்கம் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சிக்கு அதிமுக ஒரே ஒரு சீட் மட்டும் கொடுத்துள்ளது. கடையநல்லூரில் அக்கட்சியின் தலைவர் ஷேக் தாவூது போட்டியிடுகிறார். அதுவும் இரட்டை இலைச் சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார்.

இந்த ஒரு தொகுதியில் மட்டுமே இரு முஸ்லீம் லீக் கட்சிகளும் நேருக்கு நேர் மோதலில் உள்ளன.

இந்த நிலையில் தற்போது மனித நேய மக்கள் கட்சிக்கான தொகுதிகளை திமுக அறிவித்து விட்டது. அது போட்டியிடும் 5 தொகுதிகளில் நாகையும் ஒன்று. இத்தொகுதியில் அதிமுக கூட்டணியின் மனிதநேய ஜனநாயகக் கட்சி போட்டியிடுகிறது. அந்த வகையில் இந்த கட்சிகள் இத்தொகுதியில் நேருக்கு நேர் மோதுகின்றன.

மனிதநேய மக்கள் கட்சியிலிரிந்து பிரிந்து வந்ததுதான் மனிதநேய ஜனநாயகக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
DMK's IUML and ADMK alliance party TMML is locking their horns in Kadayanallur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X