For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.80 லட்சம் மோசடி பண்ணிட்டாங்க.. தீபா, ராஜா மீது பேரவை நிர்வாகி பரபரப்பு புகார்

ஜெ.தீபா 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவரது பேரவையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெ.தீபா 80 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அவரது பேரவையை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகளான தீபா அரசியலில் குதித்தார். முதலில் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்த அவர் பின்னர் ஓபிஎஸ் ஈபிஎஸ் மீது சரமாரியாக குற்றம்சாட்டினார்.

J Deeba fraudulent Rs 80 lakh complaint to police commissioner

இதைத்தொடர்ந்து எம்ஜிஆர் ஜெயலலிதா தீபா என்ற பேரவையை தொடங்கினார். பேராவையில் பலருக்கு பதவி தருவதாக கூறி தீபா பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஏற்கனவே புகார் எழுந்தது.

இந்நிலையில் சென்னை போலீசில் தீபா பேரவை நிர்வாகி ராமச்சந்திரன் புகார் அளித்துள்ளார். தீபா 80 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

பதவி ஆசை காட்டி பணமோசடி செய்ததாக ஜெ.தீபா மற்றும் அவரது நண்பர் மற்றும் டிரைவரான ராஜா மீது ராமச்சந்திரன் புகார் தெரிவித்துள்ளார்.

English summary
Ramachandran, a member of Deepa peravai, complained to the police commissioner that J Deeba had fraudulent Rs 80 lakh. Deepa and her driver Raja did this fraud job he said in the complaint.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X