For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.மகள் என உரிமை கோரும் அம்ருதா மோசடி பேர் வழி... ஹைகோர்ட்டில் ஜெ.தீபா பதில் மனு

ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் அம்ருதா ஒரு மோசடி பேர் வழி என ஹைகோர்ட்டில் ஜெ.தீபா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் வழக்கில் அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஜெ.தீபா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்கக் கோரியும், தனக்கு மரபணு சோதனை செய்ய உத்தரவிடக் கோரியும், ஜெயலலிதாவுக்கு வைஷ்ணவ முறைப்படி இறுதி சடங்கு செய்ய கோரியும் உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

J.Deepa files reply plea in Amrudha case

அந்த மனுவை நிராகரித்த நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்ருதா மனு தாக்கல் செய்தார்.

அப்போது ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்தால் என்ன என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். இந்த நிலையில் இந்த வழக்கு நாளை ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அம்ருதா என்பவர் ஜெ.வின் மகள் என்று கூறுவது சொத்துக்காகதான்.

அம்ருதா மோசடி பேர் வழி என்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.

English summary
J.Deepa files reply plea in Amrudha case as she is fraudlent and claiming Jayalalitha as mother because of assets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X