For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடு ரோட்டில் நின்று தீபா- மாதவன்- ராஜா சண்டை.. ஊரே வேடிக்கை.. நாறி போனது சிவஞானம் தெரு !

Google Oneindia Tamil News

Recommended Video

    நடு ரோட்டில் நின்று தீபா- மாதவன்- ராஜா சண்டை.. ஊரே வேடிக்கை..

    சென்னை: குடும்பம் மற்றும் கட்சி தொடர்பாக தீபா, மாதவன், ராஜா ஆகியோருக்கு இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதை ஊரே கூடிநின்று வேடிக்கை பார்த்தது.

    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்று கூறி கொண்டு தீபா ஒரு பேரவையை ஆரம்பித்தார். அந்த பேரவை தொடங்கியதுமே ஆயிரம் பிரச்சினைகள் எழுந்தன. உறுப்பினர் சேர்க்கைக்கு பணம் வாங்கியதாக பிரச்சினை எழுந்தது.

    மேலும் பல இடங்களில் பேரவை ஆரம்பித்த கையோடு கலைக்கப்பட்டன. இதனிடையே கட்சியில் ராஜாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை மாதவனால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் தீபாவுடன் சண்டையிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    போயஸ் தோட்டம்

    போயஸ் தோட்டம்

    இந்நிலையில் மாதவனும் தனி கட்சியை தொடங்கினார். சிறிது காலம் அமைதியாக இருந்த நிலையில் போயஸ் கார்டனில் கடந்த ஆண்டு பிரச்சினையை தொடங்கினர்.வீதியில் நடந்த பிரச்சினையால் எத்தனை அமைதியாக இருந்த போயஸ் தோட்டத்தை மீன் மார்க்கெட் போல் மாற்றிவிட்டனர்.

    மாதவன் வெளியேற்றம்

    மாதவன் வெளியேற்றம்

    இதையடுத்து ராஜாவை பேரவையிலிருந்து நீக்கிய தீபா கொஞ்ச நாட்களில் நல்ல பதவியுடன் மீண்டும் அழைத்து கொண்டார். சில நாட்கள் புயல் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் இவர்கள் மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மாதவன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.

    முகம் சுளிப்பு

    முகம் சுளிப்பு

    இந்நிலையில் இன்று தீபா வீடு அமைந்துள்ள திநகர் சிவஞானம் தெருவில் தீபா- மாதவன்- ராஜா இடையே சண்டை ஏற்பட்டது. இதை ஊரே நின்று வேடிக்கை பார்த்தது. குடும்பத்தின் பெயர் நாறி போச்சு. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் இப்படி சண்டையிட்டு கொள்வதை பார்த்த அப்பகுதியினர் முகம் சுளித்தனர்.

    அவப்பெயர்

    அவப்பெயர்

    ஜெயலலிதா இறந்தவுடன் தீபா அவர் சாயலில் இருப்பதால் அவர் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் கட்சியை தொடங்கி சோபிக்க முடியாவிட்டாலும் இரும்பு பெண்மணியான ஜெயலலிதாவின் அண்ணன் மகள் நடுரோட்டில் சண்டை இட்டு கொள்கிறார் என அவப்பெயரையாவது ஏற்படுத்தாமலாவது இருக்கலாமே தீபா.

    English summary
    J.Deepa, Madhavan and A.V.Raja made oral argument because of family dispute.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X