For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூக்கி அடிச்சுடுவேன் பார்ட் 2- எவனாக இருந்தாலும் முகத்தில் எறிந்துவிட்டு போய்கிட்டே இருப்பேன்-தீபா

மாதவன் வீட்டுக்கு வந்து 4 நாட்கள் ஆகிறது என்று ஜெ.தீபா தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    எவனாக இருந்தாலும் சரி யாரும் என் முடிவில் தலையிட கூடாது : தீபா- வீடியோ

    சென்னை: மாதவன் வீட்டுக்கு வந்து 4 நாட்கள் ஆகின்றன. அவர் எங்கே இருக்கிறார் என்பது எனக்கு தெரியாது, அதை நான் கேட்கவே மாட்டேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஜெ.தீபாவின் தி.நகர் இல்லத்துக்கு வருமானவரித் துறை அதிகாரி என்று கூறிகொண்டு ஒருவர் வந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீஸார் விசாரணை சிக்கினார்.

    பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை சினிமா வாய்ப்புக்கு ஒத்திகை பார்க்க இதுபோன்ற வேஷத்தை மாதவன்தான் போட சொன்னார் என்று அந்த போலி அதிகாரி பிரபாகரன் தெரிவித்தார். பின்னர் அடுத்த நாளே இந்த போலி ஐடி ரெய்டுக்கும் மாதவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ப்ளேட்டை மாற்றி போட்டுள்ளார். இதையடுத்து மாதவன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

    மாதவனுடன் பிரச்சினை இல்லை

    மாதவனுடன் பிரச்சினை இல்லை

    இதுகுறித்து ஜெ.தீபா சன் நியூஸ் தொலைகாட்சி சேனலில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கூறுகையில், வருமான வரித் துறை அதிகாரி போல் நடித்தவர் யாரென்று தெரியவில்லை. அவருக்கும் மாதவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முதலில் அதுபோல் அவர் வாக்குமூலம் கொடுத்தாலும் அடுத்த நாளே அவர் மாதவனுக்கு தொடர்பில்லை என்பதை தெளிப்படுத்தியுள்ளார். எனக்கும் மாதவனுக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை.

    குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை

    குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை

    இப்போது நடந்த பிரச்சினை வருமான வரி துறை அதிகாரி போல் நடித்த நபரால்தான் பிரச்சினை. ராஜாவை ஒரே ஒரு முறைதான் கட்சியில் இருந்து நீக்கிவிட்டு மறுபடியும் சேர்த்துக் கொண்டேன். ஆனால் மற்றவர்கள் கூறுவது போல் நிறைய முறை அவரை நீக்குவதும் கட்சிக்குள் சேர்ப்பதுமாக இல்லை. அவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்ததால் அவரை நீக்கி விட்டேன். பிறகு அந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் நான் மீண்டும் சேர்த்து கொண்டேன்.

    அதிகார போட்டி இல்லை

    அதிகார போட்டி இல்லை

    மாதவன் வீட்டுக்கு வந்து 4 நாட்கள் ஆகிறது. அவர் கோபித்து கொண்டு போய்விட்டாலும் நான் எங்கே போகிறீர்கள் என்று கேட்கவே மாட்டேன். இது எல்லார் வீட்டிலும் நடக்கும் ஒரு விஷயம்தானே. ராஜாவுக்கும் மாதவனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு எந்தவிதத்திலும் நான் காரணமில்லை. எங்கள் வீட்டில் ராஜாவா, மாதவனா என்ற அதிகார போட்டி ஏதும் இல்லை. வெளியில் இருந்து பார்ப்போருக்கு அதுபோல் தெரிகிறது.

    கேரியலில் தலையிட கூடாது

    கேரியலில் தலையிட கூடாது

    குடும்பத்துக்குள் மாதவன் தேவைத்தான். அதற்காக எனது கேரியருக்குள் அவர் தலையீடுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. என்னை இயக்குவது ராஜா இல்லை. நீ இப்படிதான் செய்ய வேண்டும் என்று என்னை நிர்பந்தித்தால் சொன்னவர்கள் முகத்தில் தூக்கி எறிந்துவிட்டு போய்டே இருப்பேன். எதுவாக இருந்தாலும் நான்தான் முடிவு எடுப்பேன்.

    மாதவன் தனிக்கட்சி

    மாதவன் தனிக்கட்சி

    ராஜாவாக இருந்தாலும் சரி மாதவனாக இருந்தாலும் சரி எவனாக இருந்தாலும் சரி யாரும் என் முடிவில் தலையிட கூடாது. தீபா பேரவை தொடங்கப்பட்ட நாள் முதல் என்னுடன் இருந்து ராஜா கட்சி பணிகளில் ஈடுபட்டு வருவதால் அவர் என்னுடனேயே இருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே மாதவனுக்கு பேரவையில் விருப்பம் இல்லை. அதனால் அவர் தனிக்கட்சி தொடங்கினார் என்றார் தீபா.

    English summary
    J.Deepa says that her husband Madhavan not in house for the past 4 days. I never asks his whereabouts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X