For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜயேந்திரர் செய்தது தியானம் 2.0.. ஜெ.தீபா டிவிட்.. யாரை கிண்டல் செய்கிறார்?

தமிழ்த்தாயின் குரல் இனி ஓங்கி ஒலிக்கும் என்று ஜெ.தீபா டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தின் போது தியானம் இருந்த விஜயேந்திரருக்கு ஜெ.தீபா கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் செய்தது 'தியானம் 2.0' என கிண்டல் செய்து இருக்கிறார். இதன் மூலம் அவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் செய்த தியானத்தை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி மடத்தின் இளைய அதிபர் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் உட்கார்ந்து இருந்தார். இது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

J.Deppa condemns Vijayedirar on Tamil Anthem issue

ஆனால் அவர் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது எழுந்து நின்றார். தற்போது விஜயேந்திரரின் செயலுக்கு ஜெ.தீபா கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

அவர் தனது டிவிட்டில் ''மதங்களுக்கு அப்பாற்பட்டது தேசப்பற்று , தியானம் செய்யவதற்கான இடம்
பொது மேடை இல்லை. தமிழ்த்தாயின் குரல் இனி ஓங்கி ஒலிக்கும், தியானம் கலைப்பீராக.'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் அவருடைய இன்னொரு டிவிட்டில் ''தியானம் 2.0'' என்று விஜயேந்திரர் தியானம் குறித்து கிண்டலாக எழுதியுள்ளார்.

English summary
J.Deppa condemns Vijayedirar on Tamil Anthem issue. She says what Vijayedirar has done is wrong, he should not meditate in public place.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X