For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த திட்டம்.. இன்றே ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் அதிரடியாக கைது

ஆக்கபூர்வமாக செயல்பட்டு மக்கள் நலனுக்காக சிறப்பான நிர்வாகத்தை வழங்க அரசுக்கு உறுதுணையாக இருங்கள் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 32 பேர் கைது- வீடியோ

    சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பு நாளை சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். மற்றொரு பக்கம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படுத்தியுள்ளார்.

    Jacto Geo government employees arrested in Tamilnadu

    இதுகுறித்து வெளியிட்ட பத்திரிகை விளம்பரங்களில், ஆக்கபூர்வமாக செயல்பட்டு மக்கள் நலனுக்காக சிறப்பான நிர்வாகத்தை வழங்க அரசுக்கு உறுதுணையாக இருங்கள் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, மீன்வளம், பணியாளர், நிர்வாக சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் வேண்டுகோள்' என்ற தலைப்பில், அனைத்து நாளிதழ்களிலும் அரசின் சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படும் அரசு நிர்வாகத்தை இயக்குவது, அரசு ஊழியர்கள் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை எனவும், 2017-2018ம் நிதியாண்டில், மாநில அரசு பெற்ற மொத்த வரி வருவாய் 93 ஆயிரத்து 795 கோடி ரூபாய் என்றும், இதில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பள செலவு மட்டும் 45 ஆயிரத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு, 20 ஆயிரத்து 397 கோடி ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Jacto Geo exicutives have been arrested in many parts of Tamilnadu ahead of their protest plan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X