For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரவோடு இரவாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீடு புகுந்து கைது.. ஜாக்டோ - ஜியோ கண்டனம்

இரவோடு இரவாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வீடு புகுந்து கைது செய்யப்பட்டதற்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் 32 பேர் கைது- வீடியோ

    சென்னை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை கோட்டை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட இருந்த நிலையில், அரசு ஊழியர்கள் பலர் நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு இருப்பதற்கு ஜாக்டோ - ஜியோ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது .

    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பு சார்பில், ஓய்வூதியக் கோரிக்கை, ஏழாவது ஊதியக் கமிஷன் பரிந்துரை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளைகாலை கோட்டை முற்றுகைப் பேரணி அறிவித்திருந்தது.

    JACTO GEO Sure about Secretariat Siege Protest Tomorrow

    இந்நிலையில், இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கூறுகையில், ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை அரசு ஏற்க மறுத்து, வீடு புகுந்து கைது செய்து அரசு போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது. இதுவரை அதிகபட்சமாக ஈரோட்டில் 32 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், எந்த அடக்குமுறையும் அரசு ஊழியர்களின் போரட்டத்தை தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

    போராட்டத்தை தடுக்க தாங்கள் கைது செய்யப்படலாம் என்கிற எண்ணத்தில், பல்வேறு அரசு ஊழியர்கள் இன்றே சென்னைக்கு வந்து பல்வேறு இடங்களில் தங்கி இருப்பதாக ஊழியர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

    இதனால், நாளை கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறலாம் என்பதால், சென்னையின் பல்வேறு இடங்களிலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    English summary
    JACTO GEO Sure about Secretariat Siege Protest Tomorrow . JACTO GEO condemns the Arrest of Government officials and Teachers as Police made precautionary Arrests over TN.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X