For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாக்டோ ஜியோ போராட்டம்: ஈரோட்டில் இருந்து புறப்பட்ட 54 அரசு ஊழியர்கள் கைது

ஈரோடில் ஜாக்டா ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

By A S Ramesh
Google Oneindia Tamil News

Recommended Video

    ஜாக்டோ ஜியோ தலைமை செயலகம் முற்றுகை போராட்டம்- வீடியோ

    ஈரோடு: சென்னையில் நடைபெறும் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு பங்கேற்க ஈரோட்டிலிருந்து புறப்பட்ட 54 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மீண்டும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக ஜாக்டா ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர். அந்த அறிவிப்பினையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அந்த அமைப்பின் நிர்வாகிகளை போலீசார் முன்னெச்சரிக்கையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே கைது செய்து வருகின்றனர்.

    Jacto Geo System Executives Arrest In Erode

    இன்று காலையும் சென்னையில் நடைபெறும் கோட்டை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க சென்ற அரசு ஊழியர்களை தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் ஈரோடு அருகேயுள்ள மொடக்குறிச்சியில் இருந்து வேன்மூலம் அரசு ஊழியர்கள் இன்று சென்னை செல்ல ஆயத்தமாகியுள்ளனர். மாவட்ட அரசு ஊழியர் சங்க தலைவர் பாஸ்கர்பாபு தலைமையிலான 54 அரசு ஊழியர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் ஈரோடு அடுத்துள்ள சோலாரில் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    English summary
    Police detained 54 Jacto geo executors led by District Government Employees Union leader Bhaskarabu and arrested them in Erode.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X