For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜக்கி வாசுதேவின் ஈஷாவில் கிட்னி அபேஸ், 5,000 குழந்தைகள் கோமா நோக்கி.. சிக்கிய பெண்ணின் தாய் 'திடுக்'

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மையத்தில் போதைப் பொருள், வசிய மருந்து பயன்படுத்தி 5,000 குழந்தைகளை கோமா நிலைக்கு தள்ளி கிட்னி திருடப் போகிறார்கள் என்று அந்த மையத்தில் சிக்கிய 2 இளம்பெண்களின் தாய் சத்யஜோதி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

கோவையைச் சேர்ந்த பேராசிரியர் காமராஜின் 2 மகள்கள் பி.டெக், எம்.டெக் படிப்பு முடித்தவர்கள். இருவரும் ஈஷா யோகா மையத்தில் அடிமைகளாக இருப்பதாக நேற்று ஆட்சியரிடம் பேராசிரியர் காமராஜும் அவரது மனைவி சத்யஜோதியும் புகார் கூறியிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் சத்யஜோதி கூறியதாவது:

என் மகள்களைப் பார்க்க வாரம் ஒருமுறை ஈஷா யோகா மையத்துக்குப் போய்க் கொண்டிருந்தேன். என் சின்ன மகள் என்னைப் பார்க்க வருவது இல்லை.

Jaggi's Isha Yoga centre Should be close, alleges couple

அவளைப் பொறுத்தவரையில் அம்மா, அப்பாவிடம் கை சோறு இனி சாப்பிடப் போவதில்லை... ஈஷா யோகா மையத்திலேயே செத்துவிட்டால் மோட்சம் கிடைக்கும் என சொல்லியிருப்பதை நம்புகிறாள்... எங்களிடம் வந்தால் நரகமாம்.

நீங்கள் மொட்டையடித்துவிட்டால் அம்மா, அப்பா கல்யாணம் செய்ய வற்புறுத்தமாட்டார்கள் எனக் கட்டாயப்படுத்தி மொட்டையடித்துவிட்டார்கள். என் மகள் 40 பவுன் கொண்டு போயிருந்தாள். அதை அப்படியே ஈஷா யோகா மையத்தில் கொடுத்துவிட்டு சாமியார்களாகிவிட்டார்கள் என் 2 மகள்களும்...

ஈஷா யோகா மையத்தில் காலை 7 மணிக்குள்ளும் இரவு 7 மணிக்குள்ளும் சாப்பிட்டாக வேண்டும். மொட்டையடித்தவர்களுக்கு தனியே ஒரு சாப்பாடு. மற்றவர்களுக்கு வசிய சாப்பாடு தனியாக கொடுக்கிறார்கள்.

ஈஷா என்கிற யோகா மையமே இருக்கக் கூடாது. ஈஷா யோகா மையத்தில் 5,000 குழந்தைகளுக்கான காப்பகம் உள்ளது. அந்த 5,000 குழந்தைகளைக் காப்பாற்றியாக வேண்டும். என் பிள்ளைகளைவிட 5,000 குழந்தைகள்தான் முக்கியம்.

இல்லையெனில் 5,000 குழந்தைகளுமே நடைபிணமாய் கோமாவுக்கு போய்விடும். அப்படி கோமாவுக்கு போகும் பிள்ளைகளின் கிட்னிகளைத் திருடி விற்கிறார்கள். அங்கு கிட்னி திருடி விற்பனை செய்வது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது.

ஈஷா யோகா மையத்தில் பயன்படுத்தப்படும் ஊதுபத்தியில் போதைப் பொருள் கலந்திருக்கிறது. தலையில் தேய்க்கும் எண்ணெய் உட்பட அவர்கள் தரும் பொருட்களைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

சிவராத்தி நாளில் 30 கி.மீ. தொலைவு அலைந்து திரிவதற்காக "ஊக்க மருந்து" தருகிறார்கள்.... என் மகள்கள் வெளியே வந்துவிட்டால் ஈஷா யோகா மையம் தொடர்பான அனைத்து உண்மைகளும் வந்துவிடும் என்பதால் அவர்களை விட மறுக்கிறது ஈஷா யோகா மையம்.

இவ்வாறு சத்யஜோதி கூறினார்.

English summary
Coimbatore couple has alleged that their daughters are held captive by Jaggi's Isha Yoga centre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X