For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈஷா மையத்தில் இளம்பெண்கள் அடைத்து வைக்கப்பட்ட விவகாரம்: பெற்றோர் மீது ஜக்கி வாசுதேவ் குற்றச்சாட்டு

By Mathi
Google Oneindia Tamil News

கோவை: ஈஷா மையத்தில் இளம் பெண்கள் இருவர் அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் கோவையை சேர்ந்த பெற்றோர்தான் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக ஜக்கி வாசுதேவ் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை வடவள்ளியை சேர்ந்த காமராஜ்- சத்தியஜோதி ஆகியோர் தங்களது மகள்கள் கீதா, லதா இருவரும் யோகா வகுப்புக்காக ஈஷா பவுண்டேசன் யோகா மையத்துக்கு சென்றனர். ஆனால் அவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு அங்கேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இருவரையும் ஈஷா யோகா மையம் சன்னியாசியாக்கிவிட்டது என குற்றம்சாட்டியிருந்தனர். இதனைத் தொடர்ந்து ஈஷா யோகா மையம் மீது ஏராளமானோர் புகார்களும் கொடுத்தனர்.

இருப்பினும் லதா, கீதா இருவரும் தாங்களே விரும்பிதான் ஈஷா யோகா மையத்தில் சன்னியாசிகளாக இருக்கிறோம் எனவும் விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் தந்தி டிவி தொலைக்காட்சிக்கு ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அளித்த பேட்டியில், அந்த பெண்களின் பெற்றோர்கள் உள்நோக்கத்துடன் புகார் கொடுத்திருக்கின்றனர் என கூறியுள்ளார்.

English summary
Isha Yoga founder Sadhguru Jaggi Vasudev balmes Latha and Geetha's Parents intentionally doing complaint against him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X