For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விராலிமலையில் 2000 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி- மாருதி கார் ஜெயிப்பது யார்?

2000 காளைகள் பங்கேற்ற பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி இன்று விராலிமலையில் துவங்கியது

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: விராலிமலையில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலகலமாக தொடங்கியது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியை துவக்கி வைத்தார்.

விராலிமலை அம்மன்குளம் பட்டமரத்தான் கருப்பசாமி கோயிலில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான போட்டி இன்று காலை 7 மணிக்கு உற்சாகத்துடன் தொடங்கியது.

Jallikattu conducts in Viralimalai

மாவட்ட ஆட்சியர் கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

Jallikattu conducts in Viralimalai

இந்த போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், நத்தம், கரர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 2 ஆயிரம் காளைகளும், திரளான மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

Jallikattu conducts in Viralimalai

இறுதியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக மாருதி கார், ராயல் என்பீல்டு புல்லட், பைக்குகள், சைக்கிள் என பல லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Jallikattu conducts in Viralimalai

இந்த போட்டியினை பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருக்கும் திரளான மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.

Jallikattu conducts in Viralimalai
English summary
Jallikattu competition started at Viralimalai in Pudukottai distict this morning. 2000 bulls participated in it. The Health Minister Vijayabaskar initiated this contest. The bullfight is going on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X