For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளைஞர்கள் போராட்டத்தால் விழிபிதுங்கிய தஞ்சை... ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஒத்திவைத்த ஆட்சியர்

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வுக்காண வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தஞ்சையில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமாகியுள்ளதையடுத்து மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டுப்போட்டிக

Google Oneindia Tamil News

தஞ்சை: ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி தஞ்சையில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை அறிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டுப் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காண வலியுறுத்தியும், ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த நிரந்தர சட்டம் இயற்றக் கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்கள் தற்போது மாநிலம் முழுவதும் பூதாகரமாகியுள்ளது.

Jallikattu postponed in Thanjavur Due to protest

மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிரந்தர சட்டம் இயற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவசரச்சட்டம் தேவையில்லை நிரந்தரச் சட்டம் தான் தேவை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முழக்கமிட்டுள்ளனர். தொடரும் போராட்டத்தால் பல இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை மாவட்ட நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் தஞ்சை மானோஜிப்பட்டியில் தொடரும் போராட்டம் காரணமாக அங்கு நடைபெற இருந்த ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் ஒத்தி வைத்துள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவத்துள்ளார்.

English summary
The struggle reached its peak across Tamilnadu on Jallikattu to seek permanent solution. In Thanjavur district collector postponed the Jallikattu due to protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X