For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"உன்னைச் சொல்லலப்பா”..... ஜனகராஜ் ஒரு தீர்க்கதரிசி பாஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: டாஸ்மாக்கை ஒழிப்போம்... பூரண மதுவிலக்கு வரவேண்டும் என்று அரசியல் கட்சிகள் ஆளாளுக்கு துண்டு போட்டு தேர்தலில் இடம்பிடிக்க முந்திக் கொண்டிருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு காமெடி காட்சி படுவேகமாக பரவி வருகின்றது.

பூரண மதுவிலக்கு தமிழ்நாட்டில் வரவேண்டும் என்று அரசியல் கட்சிகள் கங்கணம் கட்டி அடி, புடி சண்டை போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இது பக்கா அரசியல் ஸ்டண்ட் மட்டுமே என்பதில் தெளிவாக இருக்கின்றார்கள் மது எதிர்ப்பாளர்கள் .

இதற்கு எடுத்துக்காட்டாகத்தான் ஜனகராஜும், கமலும் பேசிக் கொள்ளும் இந்த காமெடி சினிமா காட்சி பேஸ்புக்கில் பெரும்பான்மையாக உலா வந்து கொண்டிருக்கின்றது. தற்போதைய சூழலுக்கு நல்ல பொருத்தமான காட்சியும் கூட.

அள்ளித் தெளிக்கும் வார்த்தைகள்:

அள்ளித் தெளிக்கும் வார்த்தைகள்:

அதில் கிட்டதட்ட இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்றார்போல வசனகர்த்தா வார்த்தைகளை அட்டகாசமாக அள்ளிப் போட்டுள்ளார். இந்தப்படத்தில் ஜனகராஜ் குழித்து சாரி...சாரி குடித்துவிட்டு செய்யும் தப்புதத்தாளங்கள்தான் ஹைலைட்டே. எம்ஜிஆர் பூட்டாருனே குடிக்கறேன் தொடங்கி படம் முழுக்கவே ரகளைதான்.

இன்னாங்கடா நினைச்சுகினு இருக்கீங்க:

இன்னாங்கடா நினைச்சுகினு இருக்கீங்க:

இந்த வீடியோவில் "நமது தேனீர் கடை" என்ற மேற்படி கடையின் வெளியில் நின்று கமலிடம் அப்படிப்போடு வசனத்தினைப் பேசுகின்றார் ஜனகராஜ் அண்ணன். படம் "உன்னால் முடியும் தம்பி". படத்தில் ஜனகராஜின் வேலையே முழுநேர "குடிமகன்" செய்யும் லீலைகள்தான்.

உனக்கு வேணும்னா திறப்பியா:

உனக்கு வேணும்னா திறப்பியா:

"பின்னனென்னயா காலியான கஜனா நிறையனும்னா சாராயக் கடையை திறப்பீங்க... பொம்பளைங்க ஓட்டு வேணும்னா கடைய மூடிறதா?" என்று கேட்கிறார்.

நீனா நீ இல்லையா கவர்மெண்ட்டு:

நீனா நீ இல்லையா கவர்மெண்ட்டு:

அதுக்கு நம்ம கமலோ, "நானா?" என்கின்றார். அதுக்கு ஜனகராஜ் அண்ணனோ, "நீன்னா நீ இல்லைய்யா... கவர்மெண்ட்டு... நீங்க குடிக்கச் சொன்னா நாங்க குடிக்கனும்... நீ நிறுத்த சொன்னா நாங்க நிறுத்திடனுமா? இன்னாங்கடா விளையாடினு இருக்கீங்க... இவனுங்களாம் எலிகனும்பா... நீனா நீ இல்லையா கவர்மெண்டு" என்று குழறியபடியே பேசினாலும் நெத்தியடியாக தற்போதைய நிலையை புட்டுப் புட்டு வைத்துள்ளார் ஜனகராஜ்.

வெறும் அரசியல் ஸ்டண்ட்தான்:

மொத்தத்தில் வசனகர்த்தாவும், ஜனகராஜும் சேர்ந்து அக்காலக்கட்டத்திலேயே இந்த பச்சோந்தி அரசியல்வாதிகள் தேர்தல் வந்தால் அரசியல் "ஸ்டண்ட்" அரங்கேற்றத் தொடங்குவார்கள் என்பதை காமெடியாகத் தோலுரித்து, காயப்போட்டுள்ளனர் படத்தில்!

English summary
Janagaraj and Kamal hasan acted in a comedy scene which was reflect the current situation in political stunt.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X