For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தலில் துரோகம்: அதிமுகவில் இருந்து 9 தருமபுரி மாவட்ட பிரமுகர்கள் டிஸ்மிஸ்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் தருமபுரி தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு உதவியதாக அம்மாவட்டத்தைச் சேர்ந்த 9 பிரமுகர்களை கட்சியில் இருந்து டிஸ்மிஸ் செய்வதாக அறிவித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்மையில் நடந்து முடிந்த 2014 மக்களவை பொதுத்தேர்தலில், தருமபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட கழக வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்து தோல்வியுற பல்வேறு வழிகளில் செயல்பட்டு கழகத்திற்கு துரோகம் புரிந்ததாலும், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகம் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்

Jaya Fires Nine for Affecting Party’s Poll Chances in Dharmapuri

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கழக ஜெ.ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலாளர் டி.ஆர்.அன்பழகன்

தருமபுரி ஒன்றியக்கழகச் செயலாளர் ஏ.கோவிந்தசாமி

மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றஇணைச்செயலாளர் சி.பழனி காட்டூர்,

மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் சி.முருகேசன்,

நல்லம்பள்ளி ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் பி.மணி, கீழ்பூரிக்கல்,

பென்னாகரம் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளர் எம்.முருகேசன், பூதிப்பட்டி,

தருமபுரி நகர ஜெ.ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் எம்.ஆர்.சக்திவேல், மதிகோள்பாளையம்,

தருமபுரி நகர எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி துணைச்செயலாளர் டி.சி.விஜயகுமார்,

மொரப்பூர் ஒன்றியக் கழக முன்னாள் செயலாளர் ஜி.மதிவாணன், சின்ளாகவுண்டம்பட்டி

ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
AIADMK supremo and Tamil Nadu Chief Minister J Jayalalithaa has ordered the removal of nine functionaries of the party’s Dharmapuri district, for working against the party in the recent Lok Sabha polls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X