For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொறுப்புள்ள, தைரியமான ரயில்வே பட்ஜெட்: ஜெயலலிதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: நிதியை அதிகரிக்கும் பொறுப்புள்ள, தைரியமான ரயில்வே பட்ஜெட் இது என முதல்வர் ஜெயலலிதா கருத்து கூறியுள்ளார்.

நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சதானந்த கவுடா லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார்.

இதுகுறித்து கருத்து தலைவர்கள் பலரும் வரவேற்பும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், வைர நாற்கர அதிவேக ரயில் திட்டம் போக்குவரத்தின் முதுகெலும்பாக அமையும் என அவர் கூறியுள்ளார்.

Jaya hails railway budget

பட்ஜெட்டுக்கு வரவேற்பு

ரயில் பாதுகாப்புக்கு மாநில அரசுகளுடன் சேர்ந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது மற்றும், சென்னைக்கு புதிய ரயில்களை இயக்கும் ரயில்வேயின் முடிவு, மேல்மருவத்தூர், வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கும் முடிவு வரவேற்கத்தக்கது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

நிதி ஒதுக்க கோரிக்கை

தமிழகத்தில் நிலுவையிலுள்ள ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முன்னுரிமை தரவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளர். புல்லெட் ரயிலை நாடே ஆவலுடன் எதிர்பாக்கிறது எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

English summary
CM Jayalalitha has hailed the union govt's railway budget and asked the centre to allocate more funds to the state project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X