For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்ஜினியர் உமா மகேஸ்வரி குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி: ஜெயலலிதா உத்தரவு

By Siva
Google Oneindia Tamil News

Jaya orders Rs. 3 lakh compensation to Uma Maheshwari's family
சென்னை: பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட என்ஜினியர் உமா மகேஸ்வரியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் என்ஜினியராக பணிபுரிந்தவர் உமா மகேஸ்வரி. அவர் கடந்த 13ம் தேதி இரவு பணி முடிந்து திரும்புகையில் மாயமானார். இதையடுத்து அவரது அலுவலகத்திற்கு அருகில் உள்ள புதரில் அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் 4 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் உமாவை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது. கைதானவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் ஆவர்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட உமாவின் குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும் உமா வழக்கில் எஞ்சியுள்ள குற்றவாளிகளையும் விரைந்து பிடிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.

உமா மகேஸ்வரிக்கு உறவுக்கார பையனை திருமணம் செய்து வைக்க அவரது தந்தை திட்டமிட்டிருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

English summary
CM Jayalalithaa has ordered the officials to give Rs. 3 lakh to the bereaved family of murdered TCS employee Uma Maheshwari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X