For Daily Alerts
Just In
அண்ணா படத்திற்கு ஜெயலலிதா மலர் தூவி அஞ்சலி

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தி, பேரறிஞர் அண்ணாவின் 105-ஆவது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை வெளியிட்டார்.
முதல் பிரதியை அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், உயர் கல்வி, பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சருமான பி. பழனியப்பன் பெற்றுக் கொண்டார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!