For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினகரனின் அடியாள் 'ஜெயா டிவி ஜனா'விடம் சிக்கி பாடாய்பட்ட ஹீரோயின்கள்... அதிரும் 'லீலைகள்'

தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனுடன் சிக்கியுள்ள ஜெயா டிவி ஜனா அரங்கேற்றிய லீலைகள் அதிரவைக்கின்றன.

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: டிடிவி தினகரனுக்கு 'எல்லாமுமாக' இருப்பவரும் தற்போது தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் விசாரிக்கப்பட்டவருமான ஜெயா டிவி ஜனா, தமிழ் ஹீரோயின்களை 'படுத்திய பாடுகள்' கணக்கில் இல்லாதது என்று கொந்தளிக்கிறது கோடம்பாக்கம்.

தினகரனின் 'ஆல் இன் ஆல்' ஜெயா டிவி ஜனாவின் பெயரை கேட்டாலே கோடம்பாக்கம் அதிர்ந்து போகும்... அப்படித்தான் சினிமா வட்டாரங்களை ஆட்டிப் படைத்திருக்கிறார் ஜனா. அந்த கொடுமையான காலங்களை சினிமா பிரபலங்கள் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

1991-96 அதிமுக ஆட்சிக்காலத்தில், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த தற்போதைய அரசியல் நடிகைக்கு என்ன நேர்ந்தது என்பதை அவர் இப்போது நினைத்தாலும் ஷாக் ஆகிடுவார். முகத்தில் ஆசிட் வீசிடுவோம் என அப்போது கோலோச்சிய கும்பலின் மிரட்டல் அந்த அரசியல் நடிகையின் இரவு தூக்கங்களை பலி கொண்டது.

ஜெர்க் ஆகும் சி நடிகைகள்

ஜெர்க் ஆகும் சி நடிகைகள்

இதே நிலைமையைத்தான் 2000-மாவது ஆண்டுகளில் முன்னணி இடத்தில் இருந்த ஹீரோயின்கள் பலரும் அனுபவித்துள்ளார்கள். 'சி' பெயருள்ள ஹீரோயின்கள் ஜனாவின் பெயரைக் கேட்டாலே 'ஜெர்க்' ஆவார்கள். அந்த அளவுக்கு 'முதலாளிகளுக்கும்' 'நடிகைகளுக்கும்' பாலமாக இருந்தவர் ஜனா.

ஜாக்பாட் நமீதா

ஜாக்பாட் நமீதா

ஜெயா டிவியின் ஜாக்பாட் நிகழ்ச்சியில் இருந்து குஷ்பு ஒதுங்கிக்கொண்டார். இதனையடுத்து அந்த இடத்திற்கு பிக்ஸ் செய்யப்பட்டவர் நடிகை நமீதா.

நமீதாவுக்கு தமிழ் வகுப்பு

நமீதாவுக்கு தமிழ் வகுப்பு

இதில் முக்கிய பங்கு ஜனாவுக்கு உண்டு. நமீதாவை ஜாக்பாட் நிகழ்ச்சிக்காக புக் செய்து, அவருக்குத் தமிழ் கற்றுக்கொடுத்து... என கூடவே இருந்தார் ஜனா.

இந்திரா நாயகி

இந்திரா நாயகி

அடுத்து இந்திரா படத்தின் நாயகி ஜெயா டிவியில் நடத்திவந்த நிகழ்ச்சியை தடாலடியாக நிறுத்தியவர் ஜனா. அவருக்குப் பதிலாக தனக்கு வேண்டப்பட்ட நடிகையை அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக்க முயற்சித்தார்.

போயஸில் பஞ்சாயத்து

போயஸில் பஞ்சாயத்து

இந்த விவகாரம் ஜெயா டிவியில் பெரும் புயலையே உருவாக்கிவிட்டது. இதற்கான பஞ்சாயத்து போயஸ் கார்டனில் நடந்ததும் தனிக்கதையே.

ஜஸ்ட் சாம்பிள்தான்...

ஜஸ்ட் சாம்பிள்தான்...

ஜெயா டிவியின் செய்தி வாசிப்பாளர்களுக்கு ஜனாவின் போன் கால் வந்தாலே உதறலெடுத்து விடும்.. இவையெல்லாம் சும்மா ஜஸ்ட் ஜனாவின் சாம்பிள்தான் என கண்சிமிட்டுகிறது கோடம்பாக்க வட்டாரம்.

English summary
Jaya tv Jana and TTV Dinakaran atrocity in tamil cinema- they tortured many leading actor and actresses in kollywood...
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X