For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுரையில் வெடிகுண்டு வீச்சில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி: ஜெ.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் நாட்டு வெடிகுண்டு வீச்சில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

"மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்பாக கையொப்பமிட 5.12.2013 அன்று அனுப்பானடி அருகே ஒரு வாகனத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது சில சமூக விரோதிகள் பெட்ரோல் நிரப்பிய புட்டிகள் வீசியதால் வாகனத்தில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டம், பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவரின் மகன் முத்துவிஜயன் என்கிற ரமணி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன்.

Jayalalitha

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த முத்துவிஜயன் என்கிற ரமணி அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் மேல அனுப்பானடியைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவரின் மகன் சோனையா, அனுப்பானடியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் முனீஸ்குமார், திருஞானம் என்பவரின் மகன் விக்னேஸ்வரன் மற்றும் தவசி என்பவரின் மகன் அர்ச்சுனன் ஆகியோர் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த முத்துவிஜயன் என்கிற ரமணி குடும்பத்திற்கு ஐந்து லட்ச ரூபாயும், பலத்த காயமடைந்தர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இத்தகைய கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு ஆணையிட்டுள்ளேன்" என்று தனது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

English summary
Chief minister J Jayalalithaa has condoled the death of the bomb attack victim and announced a relief of Rs 5 lakh to each of the families of the victims.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X