For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 13 புதுமுகங்கள் இவர்கள்தான்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 13 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து ஆளுநர் ரோசய்யாவை இன்று மாலை சந்தித்த ஜெயலலிதா, ஆட்சியமைக்க தன்னை அழைக்குமாறு கேட்டுக்கொண்டதோடு, அதற்கான ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதத்தையும் வழங்கினார். இதையடுத்து ஜெயலலிதாவை ஆட்சியமைக்க ஆளுநர் ரோசய்யா அழைப்புவிடுத்தார்.

Jayalalitha cabinet has 13 new faces

இந்நிலையில், புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர் மாளிகைக்கு அரசு அனுப்பி வைத்துள்ளது. அந்த பட்டியல் மாலை 6 மணியளவில் வெளியானது. அந்த பட்டியலில் தற்போதைய அமைச்சர்கள் பலருக்கும் அதே துறை ஒதுக்கப்பட்ட போதிலும், 13 புதிய அமைச்சர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

1)திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை

2)டாக்டர் சரோஜா- சமூக நலத்துறை

3)கேசி கருப்பண்ணன் -சுற்றுச்சூழல்

4)ஓ.எஸ். மணியன் - ஜவுளி, கைத்தறி

5)உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதி

6)துரைக்கண்ணு- கால்நடை, விவசாயம்

7)கடம்பூர் ராஜூ- தகவல், விளம்பரத்துறை

8)பெஞ்சமின் - பள்ளிக்கல்வித்துறை, விளையாட்டு, இளைஞர் நலன்

9)வெல்லமண்டி நடராஜன் -சுற்றுலாத்துறை

10)எஸ். வளர்மதி- பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன்

11)ராஜலட்சுமி- ஆதி திராவிடர் நலத்துறை

12)டாக்டர் மணிகண்டன்- தகவல் தொழில்நுட்பம்

13) விஜயபாஸ்கர்- போக்குவரத்து துறை

English summary
Jayalalitha cabinet which is announced on today, has 13 new faces.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X