For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நவராத்திரி கொலுவுக்கு புது வரவு ஜெயலலிதா பொம்மை - டுவிட்டரில் சர்ச்சை!

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை வைப்பதற்கு சர்ச்சை எழுந்தது போல கொலுப்படியில் ஜெயலலிதா பொம்மை வைக்கப்பட்டிருப்பதற்கு டுவிட்டரில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

சென்னை : நவராத்திரி பண்டிகைக்காக வைக்கப்படும் கொலுவில் இந்த ஆண்டின் புதிய வரவாக வந்துள்ள ஜெயலலிதா பொம்மைக்கு டுவிட்டரில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை குற்றவாளிகள் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து அரசு திட்டங்கள், அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம், பெயர் ஆகியவற்றை பயன்படுத்துவது தவறு என்றும் இது தவறான முன் உதாரணம் என்றும் எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பின. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ அன்பழகன், சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் பேரவை தலைவர் கே.பாலு ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அரசு பதில்

அரசு பதில்

இந்த வழக்கில் பதில் அளித்த அரசு அலுவலகங்களில், ஜெயலலிதாவின் படம் வைத்திருப்பது, அரசு எடுத்த கொள்கை முடிவுக்கு எதிரானது அல்ல. அரசு திட்டங்கள், 'அம்மா' என்ற பெயரில் உள்ளன. அம்மா என்பது பொதுப் பெயர். ஒரு மாநிலத்தில், மூன்று முறைக்கு மேல் முதல்வராக இருந்த ஒருவரின் புகைப்படத்தை, அரசு அலுவலகங்களில் ஏன் வைக்கக் கூடாது. அதுவும், அரசு உத்தரவுப்படியே, முன்னாள் முதல்வரின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது. இதில், எந்த விதிமீறலும் இல்லை என்றும் கூறியது. இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

புது வரவு ஜெ. கொலு பொம்மை

இந்நிலையில் இந்த ஆண்டின் புது வரவு என்று ஜெயலலிதாவின் கொலு பொம்மையை நெட்டிசன் ஒருவர் பதிவிட்டிருந்தார். ஜெயலலிதாவின் மார்பளவு பொம்மை, முழுஉருவ பொம்மை என இரண்டு வகையில் இந்த ஆண்டு கொலுவிற்கு பொம்மை விற்பனைக்கு வந்திருப்பதை அவர் டுவீட்டியிருந்தார்.

வரவேற்பு

கொலுவில் ஜெயலலிதாவின் பொம்மை டுவீட்டுக்கு எதிர்ப்பும் வரவேற்பும் கிளம்பியுள்ளது. ஜெயலலிதாவின் கொலு பொம்மையை வரவேற்பதாக டுவீட்டியுள்ள மற்றொரு நெட்டிசன். கொலுவில் உள்ள பொம்மைகளுக்கு பின்னான அற்புதக்கதைகள் இப்படிதானிருக்கும் என்பதை இதைவிட எளிமையாக எப்படி விளக்கிவிட முடியும்? என்றும் கேட்டுள்ளார்.

குற்றவாளி எப்படி கடவுள்?

ஆனால் சட்டத்தால் தண்டிக்கப்பட்ட ஏஒன் குற்றவாளியை எப்படி கடவுளாக்குவது என்று எதிர்ப்பும் வலுக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு உயிரிழந்ததால் விடுவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

புனிதராகிவிட முடியாது

சட்டத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி இறந்துவிட்டால் புனிதராகிவிட முடியாது. அதனால்தான் இவர்களால் ஆட்சியை கைப்பற்ற இயலுகின்றது என்று தமிழக அரசியலோடு ஒப்பிட்டு தனது கருத்தை பதிவிட்டுள்ளார் இவர்.

ஜெ.பொம்மைக்கு கண்டனம்

ஜெ-பொம்மையை கொலுவில் வைப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் இவர். ஆனால் அதற்கு ஒரு படிமேலே போய் திருச்சியில் மாபெரும் திருப்புமுனை மாநாடு வெகுவிரைவில் நடத்தப்படும்! என்றும் நக்கலாக டுவீட்டியுள்ளார்.

English summary
Again a criticism arise over a new arrival Jayalalitha clay doll for this Navarathiri, Netizens questioning that how a convict would be a god now?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X