For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி: ஜெயலலிதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: காவிரிநதிநீர் விசயத்தில் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி. தனது சுயநலத்திற்காக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை காவு கொடுத்தவர் கருணாநிதி என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சையில் பிரச்சாரம் செய்வதற்காக பொதுக்கூட்ட மேடைக்கு வந்த ஜெயலலிதாவிற்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. காய்கனிகள், கோவில் பிரசாதங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டதை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டார்.

jayalalitha election campaign in Thanjavur

சென்னையில் கடந்த மாதம் 9ந்தேதியன்று தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய ஜெயலலிதா இதுவரை 12 நாட்கள் பிரச்சாரம் செய்திருக்கிறார்.

தஞ்சாவூரில் மாநகராட்சி திடலில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்திருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, தஞ்சாவூர், திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம், கீழ்வேளூர் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 18 தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து வாக்கு சேகரித்தார்.

•மத்தியில், மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த கருணாநிதி பலமான இலக்காவை பெற்றார்

•காவிரிநதிநீர் விசயத்தில் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தவர் கருணாநிதி

•தனது சுயநலத்திற்காக காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனை காவு கொடுத்தவர் கருணாநிதி

•2011ம் ஆண்டு ஆட்சி மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் காவிரி நதிநீர் உரிமைக்காக போராடினோம்

•தொடர்ந்து வலியுறுத்தியதனால் மத்திய அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை வெளியிட்டது.

•குறிப்பிட்ட காலத்தில் விவசாய கடன்களை கட்டும் விவசாயிகளுக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது

•829 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வட்டி, மானியம் வழங்கப்பட்டுள்ளது.

•அதிமுக ஆட்சி காலத்தில் 68.46 சதவிகிதம் அதிகரித்துள்ளது

•வேளாண் விளை பொருட்களை தானியங்களை சேமித்து வைக்க கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன.

•விவசாயிகளுக்கு முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது

•தஞ்சை நெற்களஞ்சியத்தை பாலைவனமாக்கும் திட்டம் மீத்தேன் எரிவாயு திட்டம்

•இந்த திட்டத்திற்கு முந்தைய கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தான் ஒப்புதல் வழங்கியது

•கிரேட் ஈஸ்டன் தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது

•முந்தைய திமுக அரசு பெட்ரோலியம் ஆய்வு உரிமத்தை 4 ஆண்டுகளுக்கு வழங்கியது

•கருணாநிதி தலைமையிலான திமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

•கிரேட் ஈஸ்டர் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கியது

•அதிமுக அரசு 2011ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற உடன் மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு தடை விதித்தோம்

•மீத்தேன் எரிவாயு திட்டம் ஆராய குழு அமைத்தோம்

•தமிழகத்தில் இந்த திட்டம் செயல்படக்கூடாது என்று தடை விதித்தோம்.

•கிரேட் ஈஸ்டர் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனம் தமிழகத்தில் இருந்து வெளியேறி விட்டது

•திமுக தேர்தல் அறிக்கையில் இப்போது எரிவாயு எடுக்க தடை விதிப்பதாக கூறுகின்றனர்

•விவசாயிகளை அடித்து துன்புறுத்தும் திமுகவினர் விவசாயிகளின் எதிரிகள்தான்

•காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான விவசாயிகளுக்கு தலா. ரூ. 5 லட்சம் அளித்துள்ளோம்

•கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க் கடன், நடுத்தர காலக் கடன், நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

• 2021-ஆம் ஆண்டு வரை 5 ஆண்டு காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க் கடன்கள் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும்.

• உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறிய ஜெயலலிதா, அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை பட்டியலிட்டு பேசினார்.

•நெல்லுக்கான ஆதார விலை உயர்த்தி வழங்கப்படும்.

•கரும்புக் கான மாநில பரிந்துரை விலை உயர்த்தி நிர்ணயம் செய்யப்படும்.

•சர்க்கரை ஆலைகளால் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகைகள் உடனுக்குடன்வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

•மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித் தொகைகள் 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

•மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம்.

• 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினியுடன், கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதி வழங்கப்படும்.

• ஐந்தாண்டுகளில் 5 புதிய மருத் துவக் கல்லூரிகள் நிறுவப்படும்.

• கருவுற்ற தாய்மார்களுக்கு நிதியுதவி 12,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

•100 யூனிட் மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும்.

• பொங்கல் திருநாளுக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் இருந்து கைத்தறி துணிகள் வாங்கிக்கொள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 500 ரூபாய்க்கான வெகுமதி கூப்பன் வழங்கப்படும்.

•கைத்தறி நெச வாளர்களுக்கு கட்டணமில்லாமல் வழங்கப்படும் மின்சாரம் 200 யூனிட்களாக உயர்த்தப்படும்.

• விசைத்தறிக்கு வழங்கப்படும் கட்டணமில்லா மின்சாரம் 750 யூனிட்களாக உயர்த்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை பட்டியிட்டார் ஜெயலலிதா.

அதிமுக தேர்தல் அறிக்கையைப் பற்றி பல்வேறு கருத்துக்களைப் பற்றி கூறுகின்றனர். தேர்தல் அறிக்கை வெளியிட அதிமுக பயந்து விட்டதாக கூறினர். இப்போது தேர்தல் அறிக்கையை பார்த்து மீண்டும் பல கருத்துக்களை கூறுகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி, அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஏமாற்றும் செயல் என்று கூறியுள்ளார். ஆனால் மு.க.ஸ்டாலினோ, இது திமுக தேர்தல் அறிக்கையின் ஜெராக்ஸ் காப்பி என்கிறார். அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு குழப்பம் உள்ளது.

என்னைப் பொருத்தவரை ஏன் அதிமுக தேர்தல் அறிக்கை இப்போது வெளியிட்டோம் என்று கூறுகின்றேன். திமுகவிற்கு சொல்வதற்கு சாதனை எதுவுமில்லை. எனவேதான் தேர்தல் அறிக்கையை முதலில் வெளியிட்டனர்.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் 5 ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை செய்தோம். அதை மக்களிடம் விளக்கிச் சொன்ன பின்னரே எங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம்.

உங்களின் பேராதரவால் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் எள்ன செய்யப் போகிறோம் என்பதை கூறியுள்ளேன். விலையில்லாத பொருட்களை கொடுப்பதற்கு பிற கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதை நான் மறுக்கவில்லை.

நாங்கள் ஏழை, எளிய மக்களுக்காகவே அரசு நடத்துகிறோம். அதற்காகவே திட்டங்களை அறிவித்துள்ளோம்.

இலவச டிவி கொடுத்து பல ஆயிரம் கோடி ரூபாய் கேபிள்டிவி கட்டணம் வசூலிக்கும் எண்ணம் இல்லை.

எனக்கென்று குடும்பம் எதுவுமில்லை. உங்களுக்காகவே வாழ்கிறேன். விலையில்லாத அரசு வழங்கும் திட்டத்தை தொடங்கிய போது, அதற்கும் கருணாநிதியும் அறிக்கை வெளியிட்டார்.

நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை அனைத்தும் சாத்தியதே. எதிர்கட்சிகளான திமுக, பாமக, மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தனர்.

தற்போது எங்களின் தேர்தல் அறிக்கையை பற்றி மட்டுமே பேசுகின்றனர். ஜெயலலிதா மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் என்று பேசுகின்றனர்.

நான் வாக்குறுதி கொடுக்கும் முன்பு நூறு முறையல்ல 1000 முறை யோசித்துதான் அளிப்பேன். இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

இந்த தேர்தல் அறிக்கையை எதிர்ப்பவர்கள் அனைவரும் மக்களுக்கு எதிரானவர்கள். இவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் என்று ஜெயலலிதா கூறினார்.

English summary
Jayalalitha election campaign in Thanjavur.She introduce 18 constituencies candidate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X