For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதியோர் ஓய்வூதியம், 31.11 லட்ச மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்: தொடங்கி வைத்த ஜெ.,

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, முன்னதாக 5 மாணவர்களுக்கு ஸ்மார்ட் பஸ் பாஸ்களை வழங்கினார்.

அதேபோல தலைமைச் செயலகத்தில், சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 1248 பயனாளிகளுக்கு ஓய்வூதிய நலத்திட்ட ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு ஓய்வூதிய நலத்திட்ட ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

Jayalalitha inaugurate Free Bus Pass to School and College students

கடந்த 2015-2016ஆம் கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு சுமார் ரூ.480 கோடி பொருட் செலவில் 28.05 ஸ்மார்ட் பஸ் பாஸ்கள் வழங்கப்பட்டன. 2016- 2017ஆம் கல்வியாண்டில் ரூ.504 கோடி செலவில் 31.11 லட்ச பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இலவச பஸ் பாஸ்கள் பெற்று பயனடைவார்கள். தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்தில் இலவசமாக பபயணம் செய்யலாம் என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொரு செய்திக்குறிப்பு :

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இன்று (18.7.2016) தலைமைச் செயலகத்தில், சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 1248 பயனாளிகளுக்கு ஓய்வூதிய நலத்திட்ட ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு ஓய்வூதிய நலத்திட்ட ஆணைகளை வழங்கினார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி மேம்பாட்டிற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா 28.2.2016 அன்று நடைபெற்ற அரசு விழாவில் 180 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களை துவக்கி வைத்து, 193 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

Jayalalitha inaugurate Free Bus Pass to School and College students

மேலும், டாக்டர் ராதா கிருஷ்ணன் நகர் தொகுதி மக்களின் குறைகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு எளிதில் கொண்டு செல்லும் வகையில், முதலமைச்சரின் தனிப்பிரிவின் தனி அலுவலர் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியிலுள்ள தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 1248 பயனாளிகளுக்கு ஓய்வூதிய நலத்திட்ட ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்வர் ஜெயலலிதா இன்று 5 பயனாளிகளுக்கு ஓய்வூதிய நலத்திட்ட ஆணைகளை வழங்கினார்கள். இந்த பயனாளிகள் அனைவருக்கும் ஆகஸ்ட் மாதம் முதல், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத் தொகை வழங்கப்படும்.

English summary
Tamil Nadu Chief Minister handed over Old Age Pension Sanction order to the beneficiaries of R.K. Nagar Assembly constituency.Chief Minister inaugurated the scheme of distributing the Free Smart card Bus Pass to School and College students for the financial year 2016-17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X