For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேசிய கட்சியில் இணைகிறாரா ஜெ.தீபா... ? அதிமுக கதவை திறக்காததால் கடும் விரக்தி

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அதிமுகவில் இணைவதற்காக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்தும் அங்கு கதவு திறக்கப்படாததால் தேசிய கட்சி ஒன்றுக்கு தூதுவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும் சந்தித்து பேச பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் தீபாவுக்கு நேரம் தரப்படவில்லை.

இதனால் கோபத்திற்கும், விரக்திக்கும் ஆளான ஜெ.தீபா, மாற்றுக்கட்சியில் இணைந்து செயல்படுவது என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

என்.பி.ஆர், என்.ஆர்.சியை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் அறிவிக்காவிட்டால் போராட்டம்: ஸ்டாலின் என்.பி.ஆர், என்.ஆர்.சியை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் அறிவிக்காவிட்டால் போராட்டம்: ஸ்டாலின்

ஜெ.தீபா

ஜெ.தீபா

மறைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது அத்தை மறைவுக்கு பிறகு பேரவை ஒன்றை புதிதாக தொடங்கினார். மாநிலம் முழுவதும் அதற்கு நிர்வாகிகளை எல்லாம் நியமித்து அதை சிறிது காலம் நடத்தினார். பின்னர் நடந்த பல்வேறு குழப்பங்களும், ஓட்டுநர் ராஜா மீதான பணமோசடி புகார்களும் ஜெ.தீபாவை பேரவையை கலைக்க வைத்தது.

கடும் முயற்சி

கடும் முயற்சி

அதிமுகவில் இணைந்துவிடுவது என்ற முடிவுக்கு வந்த அவர் கடந்த ஒரு வருடமாக அக்கட்சியில் சேர பல்வேறு கட்டங்களாக பல வழிகளில் கடும் முயற்சி மேற்கொண்டு விட்டார். ஆனால் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. அவரை சேர்ப்பது பற்றி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.

மாற்றுக்கட்சி

மாற்றுக்கட்சி

இதனால் வெறுத்துப்போன ஜெ.தீபா, தமக்கு அரசியலே வேண்டாம் என நினைப்பதாகவும், குடும்பத்தை கவனிக்க போவதாகவும், சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இந்நிலையில் அந்த முடிவில் லேசான மாற்றமாம். காங்கிரஸ் அல்லது பாஜகவில் இணைவது பற்றியும் அவர் சிந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

நம்பிக்கை

நம்பிக்கை

ஓ.பி.எஸ். தர்மயுத்தம் மேற்கொண்டிருந்த காலத்தில் ஜெ.தீபாவுக்காக ஜெயலலிதா நினைவிடத்தில் அரைமணி நேரம் காத்திருந்து அவர் வந்த பின்பு சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது கவனிக்கத்தக்கது.

English summary
jayalalitha neice J Deepa joins the National Party?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X