For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குற்றவாளி ஜெயலலிதா புகைப்படத்தை சட்டசபையில் வைப்பதா? - 'கொங்கு' ஈஸ்வரன்: வீடியோ

உச்சநீதிமன்றம் குற்றவாளி என அறிவித்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டசபையில் வைக்கக் கூடாது என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

ஈரோடு: குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டசபையில் வைப்பதை அதிமுக தவிர்க்க வேண்டும். அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார்.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி சார்பாக ஈரோட்டில் நடந்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஈஸ்வரன், குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் அறிவித்த ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டசபையில் வைக்கக் கூடாது. அந்த எண்ணத்தை அதிமுகவினர் கைவிட வேண்டும்.

Jayalalitha portrait should not be kept in legislative assembly told kongku Eswaran

மேலும், ஒருவேளை ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரும் சிறையில் தான் இருந்திருப்பார். அவர் மறைந்துவிட்டதால் சிறை தண்டனை அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

ஆனால் அவரோடு இருந்தவர்கள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே அவரின் புகைப்படத்தை சட்டசபையில் வைப்பது ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடும் என்பதால் ஆட்சியாளர்கள் இந்த எண்ணத்தைக் கைவிட வேண்டும் என கூறியுள்ளார்.

English summary
Jayalalitha portrait should not be kept in legislative assembly told Kongu Naadu Makkal thesiyak kadchi general secretary Eswaran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X