For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மக்கள் ஏத்துக்கிட்டதா சொல்றீங்க.. அப்போ தேர்தல்ல நின்னு ஜெயிச்சு வாங்க... ஜெ. நண்பர் கீதா சவால்

மக்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் தேர்தலில் நின்று ஜெயித்து முதலமைச்சராககுங்கள் என சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் குடும்ப நண்பரான கீதா சவால் விடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: மக்களை உங்களை ஏற்றுக்கொண்டால் தேர்தலில் நின்ற ஜெயித்து முதலமைச்சராகுங்கள் என ஜெயலலிதாவின் குடும்ப நண்பரான கீதா தெரிவித்துள்ளார். சசிகலாவின் செயல்பாடுகள் அனைத்தும் கேள்விக்குறிதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதிமுக சட்டசபைக்குழு தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா நேற்று தேர்வு செய்யப்பட்டார். கட்சி தலைமையும் ஆட்சி தலைமையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Jayalalitha's family friend Geetha challenges to sasikala to win the RK.Nagar Election

இதன்மூலம் சசிகலா விரைவில் முதல்வராக பதிவியேற்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அவர் முதல்வராவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சசிகலாவால் மக்கள் அதிருப்தி

அதிமுக அடிமட்ட தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் இடையேயும் சசிகலா முதல்வராக உள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் குடும்ப நண்பரான கீதா சசிகலா முதலமைச்சராவது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

என்ன அவசரம் சசிகலாவுக்கு?

அப்போது தேர்தலில் போட்டியிட்டு வெற்றியுடன் முதலமைச்சராக வாருங்கள். என்ன அவசரம் சசிகலாவுக்கு? ஜெயலலிதாவின் தோழிதான நீங்கள் அப்படி என்றால் அவர் போட்டியிட்ட ஆர்கே.நகரில் நின்று ஆழகா ஜெயித்து வாருங்கள்.

தேர்தல்ல நின்னு ஜெயிச்சு வாங்க

மக்கள் உங்கள ஏத்துக்கிட்டதா சொல்றீங்க. அப்படியின்னா தேர்தல்ல நின்னு ஜெயிச்சு வாங்க. முதலமைச்சராக வாங்க. இவ்வாறு கீதா கூறினார்.

ஓபிஎஸ்க்கு இது நல்லதுதான்

மேலும் அவர் கூறியதாவது, ஒ.பன்னீர்செல்வத்துக்கு இது நல்லதுதான். அவர்கள் செய்யும் ஊழலுக்கு இவர் மாட்டுவாரு. அவங்க செய்த ஊழலுக்கு ஜெயலலிதா ஜெயில்ல இருந்தாங்க.

சசிகலாவை மக்கள் தூக்கி எறிவார்கள்

சசிகலாவே முதல்வராக இருக்கட்டும். மக்கள் தூக்கி எறிவார்கள். அன்றைக்கு தெரியும். என்றும் கீதா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

நிழல் முதல்வராக இருந்தார்

சகிகலா முதல்வராக வந்தவுடன் டாஸ்மாக் கடையை மூடுவது போன்ற பல அறிவிப்புகளை வெளியிடும்போது மக்களின் எதிர்ப்பு நிலை மாறாதா என்று கேட்டதற்கு அதனை அன்று பார்த்துக்கொள்ளலாம் என்றும் கீதா கூறினார்.மேலும் ஜெயலலிதா பின்னால் இருந்து நிழல் முதல் அமைச்சராக இருந்தார். ஆகையால் உடனே மாறப்போவதில்லை.

நாங்கள் நெகட்டிவாகத்தான் பார்க்கிறோம்

நீங்கள் எதிர்பார்க்கலாம். நாங்கள் நெகட்டிவாகத்தான் பார்க்கிறோம். பாசிட்டிவா நடந்துகொண்டால் மக்கள் ஓட்டு போடட்டும். இதுவெல்லாம் ஒரு கேள்விக்குறிதான். இவ்வாறு கீதா தனது பேட்டியில் தெரிவித்தார்.

English summary
Jayalalitha's family friend Geetha challenges to sasikala to win the RK.Nagar Election. she added that all of the functions of Sasikala is questionable.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X