For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தியேட்டரில் ரசிகர்கள் விசிலடிப்பதை போல எனது மூச்சுத் திணறல் உள்ளது.. அப்பல்லோவில் ஜெ. பேசிய ஆடியோ

ரசிகன் விசிலடிப்பதை போல் எனது மூச்சுதிணறல் உள்ளதால் அப்பல்லோவில் ஜெயலலிதா கடைசியாக பேசிய ஆடியோ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியீடு

    சென்னை: ரசிகன் விசிலடிப்பதை போல் எனது மூச்சத்திணறல் உள்ளது என்று ஜெயலலிதா கூறுவது போன்ற அப்பல்லோவில் அவர் பேசிய ஆடியோ தற்போது ரிலீஸாகியுள்ளது.

    கடந்த 2016-ஆம் தேதி செப்டம்பர் 27-ஆம் தேதி அப்பல்லோவில் ஜெயலலிதா 52 வினாடிகள் பேசிய ஆடியோ இன்று ரிலீஸாகியுள்ளது. அதில் அவருக்கு ரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த ஆடியோவில் ஜெயலலிதா அவ்வப்போது இருமுகிறார்.

    Jayalalithas final speech audio released

    அப்போது ஜெயலலிதா: எவ்வளவு என்கிறார்

    மருத்துவர் : 140

    ஜெயலலிதா : பை என்ன இருக்கிறது (டயஸ்டோல் என்ன என்கிறார்)

    மருத்துவர்: 80

    ஜெ.: 140/80 எனக்கு நார்மல்தான்

    மூச்சுதிணறல் எப்படி உள்ளது என்ற கேள்வி,

    ஜெ.: திரையரங்கில் முதல்வரிசையில் அமர்ந்திருக்கும் ரசிகன் விசிலடிப்பதை போல் உள்ளது மூச்சுத்திணறல் என்கிறார்.

    ஜெ.: எதில் ரெக்கார்ட் செய்கிறீர்கள்

    மருத்துவர் சிவக்குமார்: விஎல்சியில் ரெக்கார்ட் செய்கிறேன்

    ஜெ.: பதிவு செய்வது சரியாகக் கேட்கிறதா

    மருத்துவர் சிவக்குமார்: சிறப்பாக இல்லை

    ஜெ.: இதற்காகத்தான் நான் அப்பவே கூப்பிட்டேன். எடுக்க முடியாதுனு சொன்னீங்க

    மருத்துவர் சிவக்குமார்: விஎல்சி அப்ளிகேஷன் டவுன்லோடு செய்கிறேன்.

    ஜெ.: ஒன்னு கிடக்க ஒன்று நீங்களும் செய்றீங்க ,எடுக்க முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என்கிறார்

    English summary
    Jayalalitha's final speech audio which has 52 seconds released today. Already it was submitted in the Arumugasamy Commission.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X