ஜெயலலிதாவின் கைரேகை பெறும் போது அவருக்கு சுய நினைவே இல்லை... டாக்டர் சரவணன்
ஜெ. கைரேகையில் உயிரோட்டம் இல்லாததால் அதை பெறும் போது அவருக்கு சுயநினைவு இல்லை என்ற சந்தேகம் எழுவதாக திமுக மருத்துவர் அணி மாநில துணை தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவின் கைரேகையில் உயிரோட்டம் இல்லை என்று திமுக மருத்துவர் அணி மாநில துணை தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நல குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது நீண்ட காலம் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் திருப்பரங்குன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த தேர்தலில் ஏ.கே.போஸை வேட்பாளராக நிறுத்துவதற்கான வேட்புமனுவில் ஜெயலலிதாவிடம் இருந்து கைரேகை பெறப்பட்டது. இதில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது.
இந்நிலையில் ஜெயலலிதா 75 நாள்களுக்கு பிறகு மரணமடைந்துவிட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இதற்காக எழிலகத்தில் அவருக்கென அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளார். ஜெ.கைரேகை தொடர்பாக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமியிடம் திமுக மருத்துவரணி மாநில துணைத் தலைவர் சரவணன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருப்பரங்குன்றம் அதிமுக வேட்புமனுவில் இருந்த ஜெ.கையெழுத்தில் உயிரோட்டம் இல்லை.ஜெயலலிதா கை ரேகை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை நாளை தாக்கல் செய்யவுள்ளோம்.
ஜெ. சிகிச்சை குறித்த செய்திக் குறிப்புக்கும் மருத்துவமனை அறிக்கைக்கும் இருந்த முரண்பாட்டை தெரிவித்தோம். சுயநினைவோடு உள்ளவரின் கைரேகைகளில் எல்லா வளைவுகளும் என்ற வேறுபாட்டை அவருக்கு விளக்கினோம் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications