For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நினைவில்லமாகும் வேதா நிலையம்.. எதிர்க்கும் ஜெ. அண்ணன் மகன் தீபக்- வீடியோ

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவிடமாக மாற்றும் அறிவிப்புக்கு அவரது அண்ணன் மகன் தீபக் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் வீடு அரசு சார்பில் நினைவிடமாக மாற்றப்படும் என நேற்று அறிவித்தார். இதையடுத்து அந்த வீட்டுக்கு யாரேனும் சொந்த கொண்டாடலாம் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

Jayalalitha's niece Deepak objected to change Jaya's house into memorial

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், அந்த வீட்டில் தனக்கும் தன் சகோதரி தீபாவுக்கும் உரிமை உள்ளது என்று உயில் தங்களிடம் உள்ளதாகக் கூறி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களுடைய சம்மதம் இன்றி அவ்வீட்டை நினைவிடமாக மாற்ற முடியாது என்று கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம் வேதா நிலையத்தை நினைவிடமாக மாற்ற தீபக் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது.

அதையடுத்து, அமைச்சர் சி.வி.சண்முகம் போயஸ் இல்லத்தின் சட்டப்படி வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Jayalalitha's niece Deepak noted his letter to TN CM that he and his sister have rights on Jayalalitha's vedha Nilayalam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X