For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சுயநினைவில்லாமல்தான் மருத்துவமனையில் அட்மிட் ஆனார் ஜெ... பி.எச். பாண்டியன்

செப்டம்பர் 22ஆம் தேதியன்று போயஸ் தோட்ட வீட்டில் இருந்து சுயநினைவு இல்லாமல்தான் மருத்துவமனையில் பி.எச். பாண்டியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் கூறியுள்ள

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வராக சசிகலா இன்று பதவியேற்கப் போவதாக தகவல் வெளியான நிலையில் ஆளுநர் மும்பை சென்று விட்டதால் பதவியேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் நடந்தது என்ன என்றும், மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போதே சுயநினைவு இல்லாமல்தான் கொண்டு வரப்பட்டார் என்றும் பி.எச். பாண்டியன் கூறியுள்ளார்.

பிப்ரவரி 24ஆம் தேதிதான் நான் மவுனத்தை கலைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் கடந்த 2 நாட்களாக நடந்த நிகழ்வுகள் என் மவுனத்தை கலையச் செய்து விட்டது என்றார்.

Jayalalitha was not in consciousness, says PH Pandian

செப்டம்பர் 22ஆம் தேதியன்று உடல்நலக்குறைவினால் அப்பல்லோவிற்கு கொண்டு வரப்பட்டார். நீர் சத்து குறைபாடு, காய்ச்சல் என்றுதான் கூறினார்கள். ஆனால் போயஸ் தோட்ட வீட்டில் மன அழுத்தம் இருந்ததாகவும், கைகலப்பு ஏற்பட்டு தள்ளிவிட்டதாலேயே அவர் கீழே விழுந்து மயக்கமடைந்தாக செய்திகளில் வெளியானது என்றார்.

ஜெயலலிதா செப்டம்பர் 22ஆம் தேதியன்று சுயநினைவு அற்ற நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். 75 நாட்களும் நாங்கள் மருத்துவமனையில் இருந்தோம் என்றும் பி.எச். பாண்டியன் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை என பி.எச்.பாண்டியன் குற்றம் சாட்டினார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், ஜெயலலிதா சுயநினைவோடுதான் இருந்தார் என்று கூறியுள்ள நிலையில் இப்போது பி.எச். பாண்டியன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Late ADMK leader and Chief Minister Jayalalitha was not in a state of consciousness, said former assembly speaker P H Pandian.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X