For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. சிகிச்சை படத்தை வெளியிடக் கூடாதுன்னு ஜெ.வே சொன்னாராமே.. புகழேந்தி அப்படித்தான் சொல்கிறார்!

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோவை ஏன் வெளியிடவில்லை என தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

நாகை: ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போட்டோவை ஏன் வெளியிடவில்லை என தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் புகைப்படத்தை வெளியிடுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும் வெளியிடப்படவில்லை.

Jayalalitha was write a letter to governor to do not release her photo: Pugazhendi

மத்திய அமைச்சர்கள், ஆளுநர், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோருக்கும் மருத்துவமனயில் ஜெயலலிதாவை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. தமிழக அமைச்சர்களும் ஜெயலலிதாவை பார்த்தார்களா இல்லையா என முன்னுக்குப் பின் முரணாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நாகையில் அதிமுகவின் 47 வது தொடக்க விழாவில் அதிமுக கர்நாடக மாநில செயலாளரும், தினகரன் சசிகலாவின் தீவிர ஆதரவாளருமான புகழேந்தி கலந்துகொண்டார். அப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் படத்தை ஏன் வெளியிட வில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.

அதாவது ஜெயலலிதா சிகிச்சைபெறும் படத்தை வெளியிட்டால் தொண்டர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பதால் அவரது படம் வெளியிடப்படவில்லை என்றார். தொண்டர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பதாலேயே தனது புகைப்படத்தை வெளியிடக்கூடாது என ஜெயலலிதா ஆளுநருக்கு கடிதம் எழுதியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் புகைப்படங்களை வெளியிட வேண்டும் என சசிகலாவிடம் தாங்கள் போராடி வருவதாகவும் புகழேந்தி தெரிவித்தார்.

English summary
Why Jayalalitha photos not released? pugazhendi explains. He said Jayalalitha was write a letter to governor to do not release her photo.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X