For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா ஆட்சியமைக்க உதவியது விஜயகாந்த்.. வி.சி.சந்திரகுமார் பரபரப்பு குற்றச்சாட்டு

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உதவியவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்று அக்கட்சியிலிருந்து பிரிந்து வந்து 'மக்கள் தேமுதிக' அமைப்பை உருவாக்கியிருந்த வி.சி.சந்திரகுமார் குற்றம்சாட்டினார்.

'மக்கள் தேமுதிக' அமைப்பை கலைத்துவிட்டு திமுகவோடு இணைய இன்றைய நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட பிறகு அளித்த பேட்டியில் சந்திரகுமார் இவ்வாறு பேட்டியளித்தார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தங்கள் விருப்பத்திற்கு மாறாக மக்கள் நலக் கூட்டணியோடு, தேமுதிக கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளாக விளங்கிய, வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகிய 3 எம்எல்ஏக்கள், 10 மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கட்சியில் இருந்து வெளியேறி, மக்கள் தேமுதிக என ஒரு அமைப்பை தொடங்கினர்.

தோல்வி

தோல்வி

இதன்பிறகு, திமுகவுடன் கூட்டணி அமைத்து ஈரோடு கிழக்கு, மேட்டூர், கும்மிடிபூண்டி ஆகிய தொகுதிகளைப் பெற்றனர். அதில் முறையே, வி.சி.சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன், சி.எச்.சேகர் ஆகியோர் போட்டியிட்டனர். ஆனால் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.

உள்குத்து?

உள்குத்து?

புதிதாக கட்சியுடன் நெருக்கம் காட்டியவர்களுக்கு தொகுதிகளை வழங்கியதால் அம்மூன்று தொகுதி திமுகவின் நிர்வாகிகள் இவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் தோற்கடிக்க செய்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.

தீர்மானம்

தீர்மானம்

இந் நிலையில் மக்கள் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சந்திரகுமார் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பெரும்பாலானோர், திமுகவோடு தங்கள் அமைப்பை இணைக்க ஆதரவு தெரிவித்தனர். பின்னர், இது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

விஜயகாந்த் தோல்வி

விஜயகாந்த் தோல்வி

இதன்பிறகு நிருபர்களிடம் சந்திரகுமார் கூறியது: மக்கள் நல கூட்டணியுடன் சேர்ந்தால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என எவ்வளவோ எடுத்து கூறியும், விஜயகாந்த் அக்கூட்டணியுடன் இணைந்தார். தேர்தலில் படுதோல்வியைத்தான் பரிசாக பெற்றார்.

கட்டுப்பாட்டில் இல்லை

கட்டுப்பாட்டில் இல்லை

தேமுதிக விஜயகாந்த் கட்டுப்பாட்டில் இல்லை. அவரால் சொந்தமாக எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை என்பதுதான், கட்சியின் வீழ்ச்சிக்கு காரணம்.

கட்சி காணாமல் போகும்

கட்சி காணாமல் போகும்

விஜயகாந்த் பலவீனமடைந்துவிட்டார். அடுத்த தேர்தலுக்குள் தேமுதிக என்ற கட்சியே இருக்காது என்பதே எங்களது கணிப்பு.

ஜெயலலிதா வெற்றி

ஜெயலலிதா வெற்றி

மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டதன் மூலம், ஜெயலலிதாவை மீண்டும் வெற்றிபெற வைத்துள்ளார் விஜயகாந்த். ஜெயலலிதாவை அரியணையில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் நடந்து முடிந்த தேர்தலின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. அதை முனை மழுங்க செய்தவர் விஜயகாந்த்.

தேதி முடிவு

தேதி முடிவு

திமுகவுடன் எப்போது எங்கள் அமைப்பை இணைப்பது என்பது குறித்து கருணாநிதி மற்றும் ஸ்டாலினை சந்தித்து ஆலோசித்த பிறகே தெரிவிக்க முடியும். அவர்களுடன் ஆலோசித்த பிறகு, இணைப்பு விழா தேதியை நிர்ணயம் செய்ய முடியும். இவ்வாறு சந்திரகுமார் கூறினார்.

English summary
Jayalalitha won the Tamilnadu assembly election due to Vijayakanth's bad decision making, says Chandrakumar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X