For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் ஜெயலலிதா?

By Mathi
|

சென்னை: அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இடம்பெற்றுள்ள நிலையில் மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளாராக ஜெயலலிதா அறிவிக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.

லோக்சபா தேர்தலில் அதிமுக வெல்லும்.. நாட்டின் பிரதமராக முதல்வர் ஜெயலலிதா பதவி ஏற்பார் என்று அதிமுகவினர் நீண்டகாலமாக பிரசாரம் செய்து வருகின்றனர். பாஜக அணியில் அதிமுக இணையுமா என்ற கேள்வியும் எழுந்த நிலையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார்.

நரேந்திர மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், அதிமுக- பாஜக கூட்டணி அமையாது என்றே கருதப்பட்டது. அதேபோல் அடுத்தடுத்த ராஜ்யசபா தேர்தல்களில் இடதுசாரிகளுக்கு அதிமுக ஆதரவளித்தது.

ஜெ. பிரதமர் வேட்பாளர்

ஜெ. பிரதமர் வேட்பாளர்

அதிமுக பொதுக்குழுவிலும் கூட ஜெயலலிதாவை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இடதுசாரிகள் ஒருங்கிணைப்பு

இடதுசாரிகள் ஒருங்கிணைப்பு

இந்நிலையில் வரும் 5-ந் தேதியன்று அதிமுக உட்பட 14 மாநில கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் முயற்சியில் இடதுசாரி தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

இந்திய கம்யூ- அதிமுக கூட்டணி

இந்திய கம்யூ- அதிமுக கூட்டணி

இதனிடையே ஜெயலலிதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இன்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் முடிவில் அதிமுக -இந்திய கம்யூனிட் கட்சி இடையேயான கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நாளை பிரகாஷ் காரத் சந்திப்பு

நாளை பிரகாஷ் காரத் சந்திப்பு

நாளை மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஷ்காரத்தும் ஜெயலலிதாவை சந்திக்கிறார். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியுடனான கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

ஜெ. பிரதமராக வாய்ப்பு

ஜெ. பிரதமராக வாய்ப்பு

சென்னையில் இன்று ஜெயலலிதாவுடனனா சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பரதன், அதிமுக அணி இடங்களில் வென்றால் ஜெயலலிதா பிரதமராவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்றார்.

அதிக இடங்களை அதிமுக கைப்பற்றும்- கணிப்பு

அதிக இடங்களை அதிமுக கைப்பற்றும்- கணிப்பு

ஏற்கெனவே சில கருத்து கணிப்புகளில் இடதுசாரிகளுக்கு அடுத்து அதிமுகதான் அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ. பிரதமராக பரதன் ஆதரவு

ஜெ. பிரதமராக பரதன் ஆதரவு

தற்போது இடதுசாரி தலைவர்களில் ஒருவரான பரதனும் ஜெயலலிதா பிரதமராக வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

நவீன் பட்நாயக் ஆதரவு

நவீன் பட்நாயக் ஆதரவு

ஜெயலலிதாவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம் பிஜூ ஜனதா தளமும் ஆதரவு தெரிவித்திருக்கிறது.

3வது அணியின் பிரதமர் வேட்பாளர் ஜெ.?

3வது அணியின் பிரதமர் வேட்பாளர் ஜெ.?

இதனால் அதிமுக, இடதுசாரிகள் இடம்பெறும் மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதா அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. டெல்லியில் 5-ந் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திலும் இது பற்றி பிற கட்சிகளுடன் இடதுசாரிகள் ஆலோசனை நடத்தக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

English summary
After CPI leaer Bardhan's endorsed statement "If the alliance succeeds, there will be prospects of Jayalalithaa becoming the PM," Jayalalithaa may be declare as PM Candidate for Third front, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X