For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஹிலாரி போட்டியிட ஜெ.தான் காரணம்.. அதிமுக எம்.எல்.ஏ பரபரப்பு தகவல்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனைப்படிதான் அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவதாக சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ. குன்னூர் ராமு பேசியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் குன்னூர் எம்.எல்.ஏ. ராமு பேசியதாவது:

Jayalalithaa behinds Hillary contest, says ADMK MLA

அமெரிக்கா அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு பெண் அதிபர் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுவதற்கு முழுமுதல் காரணம் முதலமைச்சர் ஜெயலலிதாதான்.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது சென்னை வந்தார் ஹிலாரி கிளிண்டன். அப்போது முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்ததன் எதிரொலியாகவே இன்று அமெரிக்க தேர்தலில் அவர் போட்டியிடுகிறார்.

Jayalalithaa behinds Hillary contest, says ADMK MLA

ஜெயலலிதாவுடனான ஹிலாரி கிளிண்டன் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த சந்திப்பை உலகம் இன்று புகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த சந்திப்பின் மூலம் முதல்வர் ஜெயலலிதாவின் ஆளுமை சக்தியை ஹிலாரி கிளிண்டன் புரிந்து கொண்டார்.

முதல்வர் ஜெயலலிதா கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையில் தற்போது அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு எம்.எல்.ஏ. ராமு பேசினார்.

English summary
ADMK MLA Ramu said that After that the discussion with TN CM Jayalalithaa, Hillary Clinton decided to Contest US Presidential Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X