For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதா மரண மர்மம்: நீதிபதி ஆறுமுகசாமி நாளை விசாரணை தொடக்கம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் மைக்கப்பட்டுள்ள விசாரணை கமி‌ஷன் நாளை விசாரணையை தொடங்குகிறது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, விசாரணை ஆணையம் அமைத்துள்ளதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த விசாரணை கமிஷனின் விசாரணை நாளை முதல் தொடங்க உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 75 நாள்கள் சிகிச்சைபெற்றுவந்த அவர், டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

Jayalalithaa death mystery - commission inquiry to begin on Tomorrow

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அதிக மர்மங்கள் இருப்பதாகவும், அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன. ஜெயலலிதா மறைவுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கோரிக்கை வைத்திருந்தார். இதற்காக தர்மயுத்தமே நடத்தினார் ஓ.பன்னீர் செல்வம்.

இரு அணிகளும் இணையும் முன்பாக ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும் என்று கூறினார். விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்

விசாரணை நடைபெறும் அலுவலகம் சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்துக்கு கடந்த வாரம் நீதிபதி ஆறுமுகசாமி நேரில் பார்வையிட்டார்.

விசாரணை நடைபெறும் போது பேசும் உரையாடல் வெளியில் கேட்க கூடாது என்பதற்காக சிறப்பு வடிவமைப்புடன் அறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அலுவலகம் அமைக்கும் பணி முடிந்து விட்டதால் நீதிபதி ஆறுமுகசாமி நாளை தனது விசாரணையை தொடங்குகிறார்.

இந்த விசாரணை கமிஷனின் விசாரணை, இன்னும் மூன்று மாத காலத்துக்குள் முடிக்க வேண்டுமென தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

English summary
The enquiry commission headed Justice Arumugasamy about death of jayalalithaa to start enquiry on 25 october.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X