For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: ஜெயலலிதா உத்தரவு !

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள 500 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்துள்ளார். மேலும் மூடப்படும் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் 134 இடங்களைக் கைப்பற்றிய அதிமுக ஆட்சியைத் மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. இதையடுத்து 6-வது முறையாக தமிழக முதல்வராக கடந்த 23 ஆம் தேதி பதவியேற்றார் ஜெயலலிதா. பதவியேற்ற கையோடு 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் ஜெயலலிதா.

Jayalalithaa has ordered closure of 500 TASMAC shops

அதன்படி டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரை இயங்கி வந்த நிலையில் நண்பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டும் இயங்கும் என்ற உத்தரவை பிறப்பித்தார். மேலும், 500 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் மூட உத்தரவிடுவதற்கான கோப்பிலும் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான அரசு ஆணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மண்டலத்தில் 58 கடைகளும், திருச்சி மண்டலத்தில் 133 கடைகளும் மூடப்படுகின்றன. கோவை மண்டலத்தில் 60 டாஸ்மாக் கடைகளும், மதுரை மண்டலத்தில் 201 டாஸ்மாக் மதுபான கடைகளும் மூடப்படுகின்றன.

மூடப்படும் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான மாற்றுப் பணி குறித்த அறிவிப்பு பின்னர் தனி அரசாணையாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu CM Jayalalithaa has ordered closure of 500 TASMAC shops. its effect from tomorrow
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X