For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக அரசு பதவியேற்பு விழா... ஜெ.வின் பதவியேற்பு தமிழகம் முழுவதும் வீடியோ வேன் மூலம் ‘லைவ்’

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபை தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள அதிமுக அரசு, நாளை பதவியேற்கிறது, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆகிறார். இந்த பதவியேற்பு விழாவை வீடியோ வேன் மூலம் தமிழகம் முழுவதும் ஒளிபரப்பு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், 134 இடங்களில் வெற்றி பெற்று, அதிமுக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர் ரோசைய்யாவைச் சந்தித்து புதிய அரசு அமைக்க தன்னை அழைக்குமாறு ஜெயலலிதா உரிமை கோரினார்.

கவர்னர் அழைப்பு...

கவர்னர் அழைப்பு...

மேலும், இந்த சந்திப்பின்போது, அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும், புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் பெயர் பட்டியலையும் கவர்னரிடம் அவர் அளித்தார். அதனைத் தொடர்ந்து, புதிய அரசு அமைக்க ஜெயலலிதாவுக்கு கவர்னர் கே.ரோசய்யா அழைப்பு விடுத்தார்.

பதவியேற்பு விழா...

பதவியேற்பு விழா...

இந்நிலையில், நாளை மதியம் 12 மணியளவில் அதிமுக அரசு பதவியேற்கிறது. மீண்டும் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்கிறார். இந்த விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறுகிறது.

தீவிர ஏற்பாடுகள்..

தீவிர ஏற்பாடுகள்..

இதற்காக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தை புதுப்பிக்கும் வேலைகள் முடுக்க விடப்பட்டுள்ளன. இருக்கைகள் சரி பார்க்கப்பட்டு, புதிய பூச்சு பூசப்பட்டு விளக்கு அலங்காரம் உள்ளிட்டவை முடுக்கி விடப்பட்டுள்ளன.

பதவி பிரமாணம்...

பதவி பிரமாணம்...

ஜெயலலிதாவுக்கு கவர்னர் கே.ரோசய்யா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார். ஜெயலலிதாவை தொடர்ந்து, அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 28 அமைச்சர்களும் பதவி ஏற்க இருக்கின்றனர். தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்பது இது 6-வது முறை ஆகும்.

நேரடி ஒளிபரப்பு...

நேரடி ஒளிபரப்பு...

எனவே, இந்த பதவியேற்பு விழாவை பொதுமக்களும் நேரில் காணும் வகையில் அதனை, வீடியோ வேன் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்ய செய்தி மக்கள் தொடர்புத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, நவீன மின்னணு திரைவாகனம் (எல்.இ.டி. வீடியோ வேன்) மூலம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் இந்த பதவியேற்பு விழாவை நேரடியாக ஒளிப்பரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தஞ்சை, கரூரில் இல்லை...

தஞ்சை, கரூரில் இல்லை...

ஆனால், தஞ்சை மற்றும் கரூர் மாவட்டத்தில் மட்டும் இந்த நேரடி ஒளிபரப்பு கிடையாது. காரணம் தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதியில் அடுத்தமாதம் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரச்சார பாணியில்...

பிரச்சார பாணியில்...

அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் இதே போலத்தான் ஜெயலலிதா பேசியதை வேன் மூலமாக நேரடியாக ஒளிபரப்பினர். இப்போதும் அவரது பதவியேற்பு விழாவையும் வேன் மூலமாக லைவ் செய்யப் போவது குறிப்பிடத்தக்கது.

English summary
AIADMK general secretary and Chief Minister Jayalalithaa and her 28 Cabinet colleagues will be sworn in by Governor K. Rosaiah on Monday at the Madras University’s Centenary Hall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X