For Daily Alerts
Just In
முன்னாள் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்தார் முதல்வர் ஜெயலலிதா
சென்னை: தமிழக ஆளுநராக பணியாற்றி விடை பெற்ற ரோசய்யாவை இன்று மாலை மரியாதை நிமித்தமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார்.
தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யாவின் பதவிக் காலம், கடந்த செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிர ஆளுநராகப் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவுக்கு இந்தப் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தாற்காலிக ஆளுநராக பொறுப்பேற்க வந்த வித்யாசாகர் ராவை முதல்வர் ஜெயலலிதா இன்று காலை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதையடுத்து மாலையில் முன்னாள் ஆளுநர் கே. ரோசய்யாவை முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது நல்ல உடல் நலத்துடனும் நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.