For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"க்ளிக்... க்ளிக்".. அடடா.. "க்விக்.. க்விக்"... பத்திரிகையாளர்களால் ஜெ. படத்தை அகற்றிய அதிகாரிகள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் அகற்றப்படாமல் இருந்ததை செய்தியாளர்கள் புகைப்படம் எடுத்ததைத் தொடர்ந்து, அதனை உடனடியாக அதிகாரிகள் அகற்றினர்.

தமிழகத்தில் மே 16ஆம் தேதி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் அறிவித்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. அரசு அலுவலகங்கள், அம்மா உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் மறைக்கப்பட்டன.

அகற்றப்படாத படம்...

அகற்றப்படாத படம்...

இந்நிலையில், நேற்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றாது. அப்போது அங்குள்ள மேயர் அலுவலகத்தில் ஜெயலலிதா படம் அகற்றப்படாமல் இருந்தது. அதனை செய்தி சேகரிக்கச் சென்றிருந்த பத்திரிகையாளர்கள் புகைப்படமாக எடுத்தனர்.

உடனடியாக அகற்றம்...

உடனடியாக அகற்றம்...

இதனைக் கண்ட உயரதிகாரிகள் உடனடியாக அப்படத்தை அகற்ற உத்தரவிட்டனர். பின்னர் ஜெயலலிதா படம் அகற்றப்பட்டது.

அம்மா உணவகங்கள்...

அம்மா உணவகங்கள்...

இதேபோல், அதேபோல் அரசு சார்பில் நடத்தப்படும் அம்மா உணவகங்கள் மற்றும் சென்னை மாநகரில் உள்ள நவீன பேருந்து நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் படங்கள் மீதும் வெள்ளை ஸ்டிக்கர் ஒட்டும் பணி தீவிரமாக நடைபெற்றது.

சுவர் விளம்பரக்கள்...

சுவர் விளம்பரக்கள்...

அரசு அலுவலக சுவர்களில் அரசியல் கட்சியினர் செய்திருந்த விளம்பரங்களையும் சுண்ணாம்பு மற்றும் காவி மூலம் அழிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

வெறிச்சோடிய எம்.எல்.ஏ. விடுதி...

வெறிச்சோடிய எம்.எல்.ஏ. விடுதி...

எம்.எல்.ஏ.க்களும் தங்கள் அறைகளை காலி செய்து, சாவிகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ, விடுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

ஸ்மால் பஸ்...

ஸ்மால் பஸ்...

முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் மறைக்கப்பட்டு வரும் நிலையில், மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் ‘ஸ்மால்' பஸ்களில் இரட்டை இலை சின்னம் போன்று வரையப்பட்ட ஓவியத்தையும் மறைக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இரண்டில்லை... நான்கு

இரண்டில்லை... நான்கு

ஆனால், அவை அதிமுகவின் இரட்டை இலை சின்னமில்லை. அந்த ஓவியத்தில் நான்கு இலைகள் இருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் விளக்கமளித்து வருகின்றனர்.

சிலைகள்...

சிலைகள்...

இதேபோல், வாக்குச்சாவடி மையங்கள் அருகில் உள்ள தலைவர்களின் சிலைகளும் பிளாஸ்டிக் கவர் மற்றும் சாக்குப்பைகளால் மறைக்கும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் இன்னும் ஒரு வார காலத்தில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
AMMA unavakam and other government offices cleans its photo of Jayalalitha for election ethics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X