For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சட்டசபையில் ஜெ. படத்தை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு

சட்டசபையில் உள்ள ஜெயலலிதா படத்தை அகற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

Recommended Video

    சட்டப்பேரவையில் திறக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம்- வீடியோ

    சென்னை: சட்டசபையில் திறக்கப்பட்டு உள்ள ஜெயலலிதா திரைப்படத்தை அகற்றக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு உள்ளது.

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் இன்று திறக்கப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால் படத்தை திறந்துவைத்தார்.

     Jayalalithaa portrait need to be removed from Assembly

    சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்கக்கூடாது என தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தன. படத்திறப்பு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தன.

    அதன்படி திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் யாரும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில், ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டசபையில் இருந்து அகற்றக்கோரி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மனுவைதிமுகவின் சட்டசபை உறுப்பினர் ஜெ.அன்பழகன் தாக்கல் செய்து உள்ளார். இதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட முதன்மை அமர்வு அவசர வழக்காக தாக்கல் செய்ய அனுமதி அளித்து உள்ளது.

    English summary
    Jayalalithaa portrait need to be removed from Assembly. DMK filed Complaint on Chennai Highcourt says that Jayalalithaa portrait on Assembly is a Great Disgrace to Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X